சுத்தசங்கீத உராய்வுகளில் நெகிழ்ந்து காது மடல் நாண
தத்தியழைக்கும் குரலதனை கேட்டு மனம் தட்டாமலை சுற்ற
சித்திரமான பாதங்களோ சிலிர்த்து விண்ணை நோக்கிப் பறக்க
நித்தியசுகத் தென்றலால் பட்டுக் கூந்தல் பறக்கக் கண்டேனே
தூயமலை விளிம்பில் நின்று பயமின்றி சரிவினையே ரசிக்க
காயமின்றி உருண்டிடவே இதயம் ஏனோ ஆசையில் ஏங்க
மாயலோக கனவதுவாய் பனியும் விரிந்து படர்ந்து அழைக்க
சாயம்பூசா கன்னங்களும் சிரிப்பில் வெட்கி அசையக் கண்டேனே
கரைகாணா என்னன்பில் குழவியென உள்ளம் பொங்கி மகிழ
தரைதொடாத சொர்க்கத்திலே தனியே உடலோ கரைந்து உறைய
நுரைபொங்கும் நினைவுகளை அன்புடன் கட்டி இறுக்கி விட்டும்
விரைந்து நகராமல் கால்கள் தடுமாறித் துவளக் கண்டேனே
மலைச்சரிவில் என் கதையை ஆவலுடன் தேடுபவரோ
விலைமதிப்பற்ற புதர்களென நகைப்பதை கண்டேனே
சாலையற்ற பயணப்பாதை தடயங்களை என்னுள் வரைந்து
சிலையான பின்னும் என்னுயிர் மட்டும் நடந்திடவே கற்றுள்ளேனே
Thursday, October 25, 2007
Tuesday, October 16, 2007
கண்ணனும் நானும்
யார் இந்த கண்ணன்? எனக்கும் அவனுக்கும் உள்ள தோழமையின் ஆழம் தெரிய வேண்டுமா?
கண்மை நான் இடுவதில்லையென
என் கன்னம் பிடித்து இட்டுவிட்டான்
கூந்தலை நான் முடிப்பதில்லையென
என் தோள் பிடித்து முடித்துவைத்தான்
புடவை நான் அணிவதில்லையென
என் உடலை சுற்றி கட்டிவிட்டான்
நகைகள் நான் சேர்ப்பதில்லையென
என் கை பிடித்து போட்டுவிட்டான்
பொட்டிடவே நான் மறப்பதையுணர்ந்து
என் நெற்றிப் பொட்டை அலங்கரித்தான்
கொலுசை நான் தொடுவதில்லையென
என் கால் பிடித்து அணிவித்தான்
நிலைக்கண்ணாடி நான் தவிர்ப்பதனால்
என் முக அழகை திருஷ்டி கழித்தான்
அவன் கருமையில் நான் மயங்குவதால்
என் கருவிழியில் பரவி நின்றான்
ருசியின்றி நான் சமைத்தபோதும்
என் கையால் உண்ண அடம்பிடித்தான்
ரசனையின்றி நான் கவிதையெழுத
என் கைபிடித்து வார்த்தை கோர்த்தான்
தனிமையிலே நான் தவித்திருக்க
என் கைபிடித்து நடத்தி சென்றான்
வழுக்கிவிழ நான் இருந்த தருணங்களில்
என்னை தூக்கிநிறுத்தி கலங்க வைத்தான்
ஆனந்தமாய் நான் பறந்த வேளையில்
என் இதயவீணை மீட்டிவிட்டான்
மேகங்களை நான் விலக்கியதும்
என் முகத்தையே அங்கு நிறுத்திவைத்தான்
கண்ணீரில் நான் மூழ்கியவேளை
என் உப்புநீரை தட்டிவிட்டான்
கடமையில் நான் தடுமாறியபோதோ
என் தலையில் குட்டிவிட்டு முறைத்தான்
மனிதனென நான் இறுமாந்தபோது
என் வாலிபத்தை திருடிவிட்டான்
அறிவாளியென நான் உணர்ந்தநேரம்
என் மூச்சைபிடித்து திணறவிட்டான்
வேதனையில் நான் துடித்தநேரம்
என் தவறுகளை எரித்து விட்டான்
வலிதாளாமல் நான் உறைந்தபோதோ
என்னருகே அமைதியாக அமர்ந்து கொண்டான்
ஒலியில்லா திரைப்படத்தைக் காண்பது போல் உள்ளதா? இத்தனை செய்யும் கண்ணன் என்னுடன் உரையாடுவானா?
அடக்கம் கற்பித்த வாமனன் நீ
அமைதி போதித்த ராமன் நீ
நட்பின் இலக்கண கண்ணன் நீ
பவித்திரம் உணர்த்திய கல்கி நீ
உன் கருமையை காதலிக்க வைத்தவனே
நம் ரகசிய உரையாடலை சொல்லவா
என் சிறுமையை ஏற்றுக் கொண்டவனே
நம் அன்பின் ஆழத்தை எடுத்துரைக்கவா
பதில் தருகிறான்..........
வேத நாதமாய், உன் அபசுவர கீதமாய்
சிற்பியின் உளியாய், உன் நிலமதிரும் நடையாய்
அலையோசையாய், உன் வெட்டிப் பேச்சாய்
அதிர்வலைகளாய் நான் பேசுவதை சொல்லிவிடு
வண்டின் ரீங்காரமாய், மலர் வாசமாய்
தென்றலின் தீண்டலாய், பறவையின் படபடப்பாய்
நீர்வீழ்ச்சி ஓசையாய், மழலைச் சிரிப்பாய்
இயற்கையாய் நான் பேசுவதை சொல்லிவிடு
காலையில் தட்டி எழுப்புவதை சொல்லிவிடு
மாலையில் தட்டி தாலாட்டுவதை சொல்லிவிடு
வேலையில் விரட்டி ஓட்டுவதை சொல்லிவிடு
சேலையில் ஒளிந்து சிரிப்பதை சொல்லிவிடு
உன்னை சீண்டிவிட்டு அழவைப்பதை சொல்லிவிடு
உன்னை ரசிக்கக் கற்றுத் தந்ததை சொல்லிவிடு
உன்னை கவிதையெழுத வைத்ததையும் சொல்லிவிடு
உன்னை கடிந்து மறைவதை சொல்லிவிடு
உன் எண்ணத்தில் பேசுவதை சொல்லிவிடு
உன் சொற்களில் ஒலிப்பதை சொல்லிவிடு
உன் எழுத்துக்களில் எதிரொலிப்பதை சொல்லிவிடு
உன் ரசனைகளில் வெடிப்பதை சொல்லிவிடு
உனக்காக கீதை போதிப்பதை சொல்லிவிடு
உன்னுடன் பல்லுருவில் பேசுவதை சொல்லிவிடு
உன் காலமுழுவதும் உரையாடுவதை சொல்லிவிடு
உன் மௌனமாய் நானிப்பதை சொல்லிவிடு

Tuesday, October 02, 2007
தந்தை காந்தியிடம் நான் கேட்கும் கேள்விகள்
வெள்ளையுடை தரித்து
முட்டைக் கண்ணாடியணிந்து
ஆட்டுப்பால் குடித்து
கட்டாந்தரையில் படுத்து
சொந்தபந்தம் பாகுபாடின்றி
அஹிம்சையெனும் ஆயுதமேந்தி
மத ஒற்றுமையை போதித்து
உண்ணாவிரதம் இருந்து
நாட்டின் சுதந்திரமே
கர்மமென வாழ்ந்தீரே
கலர்கலராய் துண்டு போர்த்தி
சுகத்திலே உருண்டு புரண்டு
சொந்தங்களை கவனித்து
உண்டுவிட்டு உண்ணாவிரதமிருந்து
பிறரின் சதையை வதைத்து
நிதி சேர்த்து நீதியை மிதித்து
நீதிபதியை கண்டித்து
சுதந்திரத்தை நிலைநாட்டும்
நல்லோர் வாக்கினுள்
அரசியல் சிரஞ்சீவியானதை
கலங்காமல் உணர்ந்தீரோ
சபர்மதி ஆசிரமத்தில்
குல்லாய் அணிந்து
சாதி மத பேதமின்றி
அனைவரையும் அணைத்து
அன்பாய் அரவணைத்து
புல்லட் புரூப் வண்டியின்றி
கால்நடையாக நடந்து
அரசியல் புரியாமல்
திறந்த நெஞ்சுடன் வாழ்ந்தீரே
பதவி மோகத்தில்
நாட்டையும் தன்னையும்
விற்கும் அரசியல்வாதிகள்
உம்மை இன்று மட்டும்
மாலையால் தழுவும் போது
உந்தன் நெஞ்சிலிருக்கும் ராமர்
வலி தாளாமல் துடித்துக்
கதறுவதை உணர்கிறீரோ
மதங்கடந்து மனமொன்றவே
சரிசமமாய் அனைவருக்கும்
நான்கு புருஷார்த்தங்களென
தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்
கற்றுத் தந்த வெகுளித் தந்தையே
வன்மம், சூழ்ச்சி, சுயநலம், பேராசை
இவை மட்டுமே உயிர் வாழத் தேவை
என்ற துண்டாடும் கொள்கைகளை
தற்போதைய அரசியல் தலைவர்களிடம்
கற்றுக் கொள்ளாமல் பிறந்து இறந்தது
பரிதாபமே என்பதை உணர்வீரோ
முட்டைக் கண்ணாடியணிந்து
ஆட்டுப்பால் குடித்து
கட்டாந்தரையில் படுத்து
சொந்தபந்தம் பாகுபாடின்றி
அஹிம்சையெனும் ஆயுதமேந்தி
மத ஒற்றுமையை போதித்து
உண்ணாவிரதம் இருந்து
நாட்டின் சுதந்திரமே
கர்மமென வாழ்ந்தீரே
கலர்கலராய் துண்டு போர்த்தி
சுகத்திலே உருண்டு புரண்டு
சொந்தங்களை கவனித்து
உண்டுவிட்டு உண்ணாவிரதமிருந்து
பிறரின் சதையை வதைத்து
நிதி சேர்த்து நீதியை மிதித்து
நீதிபதியை கண்டித்து
சுதந்திரத்தை நிலைநாட்டும்
நல்லோர் வாக்கினுள்
அரசியல் சிரஞ்சீவியானதை
கலங்காமல் உணர்ந்தீரோ
சபர்மதி ஆசிரமத்தில்
குல்லாய் அணிந்து
சாதி மத பேதமின்றி
அனைவரையும் அணைத்து
அன்பாய் அரவணைத்து
புல்லட் புரூப் வண்டியின்றி
கால்நடையாக நடந்து
அரசியல் புரியாமல்
திறந்த நெஞ்சுடன் வாழ்ந்தீரே
பதவி மோகத்தில்
நாட்டையும் தன்னையும்
விற்கும் அரசியல்வாதிகள்
உம்மை இன்று மட்டும்
மாலையால் தழுவும் போது
உந்தன் நெஞ்சிலிருக்கும் ராமர்
வலி தாளாமல் துடித்துக்
கதறுவதை உணர்கிறீரோ
மதங்கடந்து மனமொன்றவே
சரிசமமாய் அனைவருக்கும்
நான்கு புருஷார்த்தங்களென
தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்
கற்றுத் தந்த வெகுளித் தந்தையே
வன்மம், சூழ்ச்சி, சுயநலம், பேராசை
இவை மட்டுமே உயிர் வாழத் தேவை
என்ற துண்டாடும் கொள்கைகளை
தற்போதைய அரசியல் தலைவர்களிடம்
கற்றுக் கொள்ளாமல் பிறந்து இறந்தது
பரிதாபமே என்பதை உணர்வீரோ
Thursday, September 20, 2007
அவனும் அவளும்
சந்தங்கள் போட்டியிட்டன அவள் விழியைக் கண்டு
சங்கதிகள் களைகட்டின அவன் உவகை கண்டு
சங்தேகங்கள் முளைத்தன அவள் அழகைக் கண்டு
சங்கேதங்கள் கலகலத்தன அவன் சிமிட்டல் கண்டு
சலசலத்தன இலைகளும் அவள் நாதம் கண்டு
சலாமிட்டன உலகம் அவன் சாதனை கண்டு
சலங்கைகளோ அணைத்தன அவள் பாதம் கண்டு
சலிப்புகளே ஓடினவே அவன் உற்சாகம் கண்டு
காலோசையும் மருண்டன அவள் மென்மை கண்டு
காலணிகள் நடுங்கின அவன் மேன்மை கண்டு
காலங்கள் தடுமாறின அவள் வெண்மை கண்டு
காலவனும் ரசித்தானே அவன் மதியைக் கண்டு
மாதுளை வெட்கின அவள் வண்ணம் கண்டு
மாதுக்கள் வியந்தனர் அவன் எண்ணம் கண்டு
மாதாவாய் போற்றினர் அவள் அன்பைக் கண்டு
மாதிரியாய் கொண்டனர் அவன் பண்பைக் கண்டு
சித்திரங்களே சிலிர்த்தன அவள் ரசனை கண்டு
சித்தங்களோ குளிர்ந்தன அவன் சிரிப்பைக் கண்டு
சித்திகள் குவிந்தன அவள் அடக்கம் கண்டு
சித்பவமாய் ஒளிர்ந்தானே அவன் கடமை கொண்டு
அவனியது போற்றியது அவளை நிலவாய் கண்டு
அவனியது காட்டியது அவனை ஆதவன் என்று
அவனியது விரும்பியது அதன் விளையாட்டில் ஒன்று
அவனும் அவளும் பார்த்தனரே விதியைக் கொண்டு
மோதலுக்கு அழைத்தானே அவளைக் கண்டு
மோதலிலும் கலங்கினாளே அவனைக் கண்டு
மோதுவதிலும் ஆனந்தம் இருவருமே கண்டு
மோதிரம் மாற்றினரே காதல் கொண்டு

Tuesday, September 18, 2007
துறவி யார்?

பிஞ்சு மலரே
கொஞ்சும் மொழியே
நெஞ்சக் கனியே
கெஞ்சும் கவியே
மழலை சிகரமே
குழந்தை செல்வமே
அழகு மாணிக்கமே
பழுதில்லா திலகமே
காலைப் பொழுதில்
பாலைக் குடித்தாய்
மாலை நேரத்திலோ
சிலையாய் அமர்ந்தாய்
விழுதாய் நீயிருந்தும்
பழுதான அநாதையானேன்
அழுதாலும் கலங்காமல்
எழுதாய் என்றாயே
பஞ்சமது வாட்டியதால்
தஞ்சமது அடைந்தாயோ
கஞ்சமில்லா அன்புடன்
அஞ்சாமல் சென்றாயோ
விண்ணின் ஆதவனே
மண்ணின் மைந்தனே
எண்ணம் சிறக்கவே
(இவ்)வண்ணம் ஏற்றாயோ
கண்களின் தீட்சண்யத்துடன்
கண்ணீரை துடைத்தாயே
கண்ணார செல்வத்தின்
கண்டேனே உயர்வதனை
புகைப்படத்தில் நிற்கும்
நகையோன் மகனே
சிகையில்லா துறவியான
என்னையும் பார் மகனே
Friday, September 14, 2007
விநாயகர் ஸ்துதி
உன் முகம் கண்டேனே
ஊழ்வினை களைந்தேனே
உன்னிடம் கற்றேனே
ஊக்கமது பெற்றேனே
நான்காம் நாள் பிறந்தோனே
நான்மறையில் சிறந்தோனே
அஷ்டதிக்கின் அதிபதியே
அண்டத்தின் முதல்பதியே
பூதகணங்கள் பூஜிக்கவே
பூவுலகம் செழித்திடவே
சித்திபுத்தி இருப்பிடமாய்
சிந்தனையின் பிறப்பிடமாய்
கர்மத்தில் ஒருகால் ஊன்றி
கடவுளாய் மறுகால் உணர்ந்து
வேதாந்தம் நினைவில் கொள்ள
செவியதனை காட்டினாயோ
வாய்பேச்சை வெட்டிவிட்டு
வாய்மைதனை பற்றியபடி
சிறுமை காணா கண்களாலே
தியானம் பயில சொன்னாயோ
நச்சுப் பல்லை பிடுங்கிவிட்டு
நல்ல எண்ணம் கொள்ள சொன்னாய்
குண்டலினி சக்தியைத்தான்
இடுப்பு பாம்பாய் காட்டினாயோ
செல்வச் செழிப்பு வயிறுடனே
என் நன்மை தீமை ஏற்றாயே
கட்டுக்கடங்கா மனதினையே
மூஞ்சூராய் அடக்குவாயோ
கோடாரியால் மாயை அழித்திட்டு
கயிறினாலே உன்வசம் இழுத்திட்டாய்
ருத்திராட்சம் கொண்டு ஜெபிப்போனை
உன்னருளால் நனைத்திட்டாயோ
நாதியற்றோரும் நாடிதனில்
இதபிங்கலம் உயிர்பித்து
சூட்சுமம்தனை அறிந்திடவே
தும்பிக்கை உயர்த்தினாயோ
ஓம்காரத்தின் நாயகனே
சிவசக்தி செல்வமகனே
எதுவுமே அல்பமில்லையென
அருகம்புல்லை ஏற்றாயோ
சித்திபுத்தி நாதனாய்
தெற்கில் நீ பிரம்மச்சாரியானாய்
க்ஷேமம் லாபம் தந்தையாய்
வடக்கிலோ நீ சம்சாரியானாயே
வேதவியாசரின் பாடல்களை
தந்தமுடைத்து எழுதினாயே
வேதமறியா இச்சிறுமியைதான்
உண்மையில் நிறுத்துவாயோ
கொழுக்கட்டை பிரீதியிலே
கோவிலென என்னில்லம் வந்தாய்
கொழுந்து விட்டெறியும் அறியாமையை
பொசுக்கிவிட்டு ரட்சிப்பாயோ
அகஅழுக்கை அழித்திட்டு
கம்பீர யானையாய் நிற்பேனா
தீயவைதனை மூழ்கிவிட்டு
தீபமாய் ஒளிவீசி திகழ்வேனா
தள்ளாமை வந்த போதிலும்
தவறாமல் உன் புகழ்பாடி
தவமிருந்து காத்திடவே
தவபுதல்வன் அருள்வாயோ
விக்னமுள்ள நாளெதுவும்
உன் பார்வையில் சிறந்திடுமே
கட்டியணைக்கும் இறப்பிலுமே
உன் நாமம் ஜெபிப்பேனா
பெற்றோரை வணங்கிடவே
உன்னிடமிருந்து கற்றேனே
பொறுமைதனை தந்திட்டே
உன்னகம் ஆட்கொள்வாயோ
ஊழ்வினை களைந்தேனே
உன்னிடம் கற்றேனே
ஊக்கமது பெற்றேனே
நான்காம் நாள் பிறந்தோனே
நான்மறையில் சிறந்தோனே
அஷ்டதிக்கின் அதிபதியே
அண்டத்தின் முதல்பதியே
பூதகணங்கள் பூஜிக்கவே
பூவுலகம் செழித்திடவே
சித்திபுத்தி இருப்பிடமாய்
சிந்தனையின் பிறப்பிடமாய்
கர்மத்தில் ஒருகால் ஊன்றி
கடவுளாய் மறுகால் உணர்ந்து
வேதாந்தம் நினைவில் கொள்ள
செவியதனை காட்டினாயோ
வாய்பேச்சை வெட்டிவிட்டு
வாய்மைதனை பற்றியபடி
சிறுமை காணா கண்களாலே
தியானம் பயில சொன்னாயோ
நச்சுப் பல்லை பிடுங்கிவிட்டு
நல்ல எண்ணம் கொள்ள சொன்னாய்
குண்டலினி சக்தியைத்தான்
இடுப்பு பாம்பாய் காட்டினாயோ
செல்வச் செழிப்பு வயிறுடனே
என் நன்மை தீமை ஏற்றாயே
கட்டுக்கடங்கா மனதினையே
மூஞ்சூராய் அடக்குவாயோ
கோடாரியால் மாயை அழித்திட்டு
கயிறினாலே உன்வசம் இழுத்திட்டாய்
ருத்திராட்சம் கொண்டு ஜெபிப்போனை
உன்னருளால் நனைத்திட்டாயோ
நாதியற்றோரும் நாடிதனில்
இதபிங்கலம் உயிர்பித்து
சூட்சுமம்தனை அறிந்திடவே
தும்பிக்கை உயர்த்தினாயோ
ஓம்காரத்தின் நாயகனே
சிவசக்தி செல்வமகனே
எதுவுமே அல்பமில்லையென
அருகம்புல்லை ஏற்றாயோ
சித்திபுத்தி நாதனாய்
தெற்கில் நீ பிரம்மச்சாரியானாய்
க்ஷேமம் லாபம் தந்தையாய்
வடக்கிலோ நீ சம்சாரியானாயே
வேதவியாசரின் பாடல்களை
தந்தமுடைத்து எழுதினாயே
வேதமறியா இச்சிறுமியைதான்
உண்மையில் நிறுத்துவாயோ
கொழுக்கட்டை பிரீதியிலே
கோவிலென என்னில்லம் வந்தாய்
கொழுந்து விட்டெறியும் அறியாமையை
பொசுக்கிவிட்டு ரட்சிப்பாயோ
அகஅழுக்கை அழித்திட்டு
கம்பீர யானையாய் நிற்பேனா
தீயவைதனை மூழ்கிவிட்டு
தீபமாய் ஒளிவீசி திகழ்வேனா
தள்ளாமை வந்த போதிலும்
தவறாமல் உன் புகழ்பாடி
தவமிருந்து காத்திடவே
தவபுதல்வன் அருள்வாயோ
விக்னமுள்ள நாளெதுவும்
உன் பார்வையில் சிறந்திடுமே
கட்டியணைக்கும் இறப்பிலுமே
உன் நாமம் ஜெபிப்பேனா
பெற்றோரை வணங்கிடவே
உன்னிடமிருந்து கற்றேனே
பொறுமைதனை தந்திட்டே
உன்னகம் ஆட்கொள்வாயோ
Monday, September 03, 2007
கோகுலாஷ்டமி
அஷ்டமி திதி
ரோஹிணி நட்சத்திரம்
நள்ளிரவு நேரம்
இருண்ட சிறை
எட்டாவது குழந்தை
கருநீல உருவம்
இவையாய் நீ பிறந்தாய்
பல மனைகளில் வெண்ணெய் திருடி
எண்ணற்ற கோபியருடன் நடனமாடி
கணக்கற்ற மனைவியரை மணந்து
பற்பல அரக்கர்களை அழித்து
அர்ச்சுனனுக்கு கீதோபதேசம் அளித்து
தர்மயுத்தமென்ற பெயரில் பூபாரத்தை குறைத்து
யாதவர் குலத்தின் திமிரை ஒடுக்கி
உத்தவனுக்கு மீண்டும் ஞானபோதேசமளித்து
உலகினைவிட்டு மறைந்த கண்ணனே
உனக்கு என் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
வந்திடுவாய் சிறு கண்ணனாய்
ஏந்திடுவாய் சிறு கைகளை
பற்றிடுவாய் என் கைகளை
பெற்றிடுவாய் என் சீடைகளை
கட்டிடுவாய் உன் அன்பினால்
வெட்டிடுவாய் என் அறியாமையை
தரித்திடுவாய் வெகுளிப் பார்வையை
சிரித்திடுவாய் என் மனமகிழ
கண்ணா நீ வருவாயோ – என்னை
காண தான் நீ வருவாயோ

Wednesday, August 29, 2007
என்னைக் காதலித்து பார் – பார்வை ஐந்து
கடலலையின் தாலாட்டில் புரள்வோமா
செம்பருத்தி சிவப்பினுள் மறைவோமா
வைரத்தினை உறைவிடமாய் கொள்வோமா
என்னைக் காதலித்துதான் பாரம்மா
தாலாட்டில் புரண்டிடு அவளுடன்
சிவப்பினுள் மறைந்திடு இவளுடன்
உறைந்து மகிழ்ந்திடு இருவருடன்
என்னை விட்டுவிடு மகிழ்வுடன்
இசைகேட்டும் ஒதுங்குவது ஏனம்மா
வார்த்தையால் சாடுவது ஏனம்மா
கோபத்தின் காரணம்தான் யாதம்மா
என்னை காதலித்துதான் பாரம்மா
ஒதுங்க முடியாமல் தவிப்பது நானல்லவோ
உன்னை சாடாமலே துடிப்பது நானல்லவோ
காரணமும் காரியமும் என்வாழ்வில் நீயல்லவோ
என்னைக் காதலிக்கத் தூண்டியதும் நீயல்லவோ
கண்ணனின் ராதையே நீதானம்மா
காதலர்கள் சின்னமே நாம்தானம்மா
கவிதைகள் பொழிந்திடும் கண்ணம்மா
என்னுடன் சேர்ந்திடுவாய் செல்லம்மா
பிரிந்தே வாழ்ந்திடுவோம் உலகிற்காக
சிரித்தே அழுதிடுவோம் உலகிற்காக
பாராமலே இருந்திடுவோம் உலகிற்காக
மறவாமல் இறந்திடுவோம் உலகிற்காக
பிரிவு நீயெனில் பிறப்பிலும் நீயே
இருப்பு நீயெனில் இறப்பிலும் நீயே
சிரிப்பு நீயெனில் சிறப்பிலும் நீயே
பிரபஞ்சம் நானெனில் நானே நீயே
இசையின் நாயகனே செல்கிறேன் நான்
இல்லத்தின் கூவலில் கரைகிறேன் நான்
காதலை மறைத்திட்டு வாழ்கிறேன் நான்
காத்திருப்பேன் உனக்காக என்னென்றும் நான்
செம்பருத்தி சிவப்பினுள் மறைவோமா
வைரத்தினை உறைவிடமாய் கொள்வோமா
என்னைக் காதலித்துதான் பாரம்மா
தாலாட்டில் புரண்டிடு அவளுடன்
சிவப்பினுள் மறைந்திடு இவளுடன்
உறைந்து மகிழ்ந்திடு இருவருடன்
என்னை விட்டுவிடு மகிழ்வுடன்
இசைகேட்டும் ஒதுங்குவது ஏனம்மா
வார்த்தையால் சாடுவது ஏனம்மா
கோபத்தின் காரணம்தான் யாதம்மா
என்னை காதலித்துதான் பாரம்மா
ஒதுங்க முடியாமல் தவிப்பது நானல்லவோ
உன்னை சாடாமலே துடிப்பது நானல்லவோ
காரணமும் காரியமும் என்வாழ்வில் நீயல்லவோ
என்னைக் காதலிக்கத் தூண்டியதும் நீயல்லவோ
கண்ணனின் ராதையே நீதானம்மா
காதலர்கள் சின்னமே நாம்தானம்மா
கவிதைகள் பொழிந்திடும் கண்ணம்மா
என்னுடன் சேர்ந்திடுவாய் செல்லம்மா
பிரிந்தே வாழ்ந்திடுவோம் உலகிற்காக
சிரித்தே அழுதிடுவோம் உலகிற்காக
பாராமலே இருந்திடுவோம் உலகிற்காக
மறவாமல் இறந்திடுவோம் உலகிற்காக
பிரிவு நீயெனில் பிறப்பிலும் நீயே
இருப்பு நீயெனில் இறப்பிலும் நீயே
சிரிப்பு நீயெனில் சிறப்பிலும் நீயே
பிரபஞ்சம் நானெனில் நானே நீயே
இசையின் நாயகனே செல்கிறேன் நான்
இல்லத்தின் கூவலில் கரைகிறேன் நான்
காதலை மறைத்திட்டு வாழ்கிறேன் நான்
காத்திருப்பேன் உனக்காக என்னென்றும் நான்
Tuesday, August 14, 2007
என்னைக் காதலித்துப் பார் – பார்வை நான்கு
இலைகளின் சலசலப்பில் கேட்டது உன்னிசை
இமைகளின் படபடப்பில் கேட்டது உன்னிசை
இதழ்களின் குவிதலில் கேட்டது உன்னிசை
இனியவள் இதயத்திலும் கேட்டது உன்னிசை
காகிதக் கப்பல் பாடியது உன்னிசை
கானகத்து பயங்கரம் பாடியது உன்னிசை
காதோரக் காற்று பாடியது உன்னிசை
காதலியின் இதயத்திலும் பாடியது உன்னிசை
நிழல்களின் மௌனத்தில் உறைந்தது உன்னிசை
நிஜங்களின் அசைவுகளில் உறைந்தது உன்னிசை
நியதிகளின் கடுமையில் உறைந்தது உன்னிசை
நிர்மல இதயத்திலும் உறைந்தது உன்னிசை
மோனைகளின் வரிசையில் சிலிர்த்தது உன்னிசை
மோகனப் புன்னகையில் சிலிர்த்தது உன்னிசை
மோகினி அழகாய் சிலிர்த்தது உன்னிசை
மோன இதயத்திலும் சிலிர்த்தது உன்னிசை
வெள்ளை நிறமாய் நிறைந்தது உன்னிசை
வெயில் கடுமையிலும் நிறைந்தது உன்னிசை
வெற்றிட சாரமாய் நிறைந்தது உன்னிசை
வெகுளி மனதில் நிறைந்தது உன்னிசை
மரண ஓலத்தில் ஒலித்தது உன்னிசை
மகரந்த சேர்க்கையில் ஒலித்தது உன்னிசை
மதுவின் சிதறல்களில் ஒலித்தது உன்னிசை
மதியழகி இதயத்திலும் ஒலித்தது உன்னிசை
உன் மொழியாய் வருடியது உன்னிசை
உன் காதலாய் வருடியது உன்னிசை
உன் அழைப்பாய் வருடியது உன்னிசை
உன்னவள் இதயத்திலும் வருடியது உன்னிசை
காதலன் வரவை உரைக்கிறதோ உன்னிசை
காதல் தேவையென சொல்கிறதோ உன்னிசை
காதலிக்க கற்றுத் தருகிறதோ உன்னிசை
காதலியாய் புதியவளை நாடுகிறதோ உன்னிசை
என்னை பைத்தியம் என்கிறதோ உன்னிசை
என்னை வைத்தியம் செய்கிறதோ உன்னிசை
என் மதியை மயக்குமா உன்னிசை
என் விதியை வெல்லுமா உன்னிசை
இமைகளின் படபடப்பில் கேட்டது உன்னிசை
இதழ்களின் குவிதலில் கேட்டது உன்னிசை
இனியவள் இதயத்திலும் கேட்டது உன்னிசை
காகிதக் கப்பல் பாடியது உன்னிசை
கானகத்து பயங்கரம் பாடியது உன்னிசை
காதோரக் காற்று பாடியது உன்னிசை
காதலியின் இதயத்திலும் பாடியது உன்னிசை
நிழல்களின் மௌனத்தில் உறைந்தது உன்னிசை
நிஜங்களின் அசைவுகளில் உறைந்தது உன்னிசை
நியதிகளின் கடுமையில் உறைந்தது உன்னிசை
நிர்மல இதயத்திலும் உறைந்தது உன்னிசை
மோனைகளின் வரிசையில் சிலிர்த்தது உன்னிசை
மோகனப் புன்னகையில் சிலிர்த்தது உன்னிசை
மோகினி அழகாய் சிலிர்த்தது உன்னிசை
மோன இதயத்திலும் சிலிர்த்தது உன்னிசை
வெள்ளை நிறமாய் நிறைந்தது உன்னிசை
வெயில் கடுமையிலும் நிறைந்தது உன்னிசை
வெற்றிட சாரமாய் நிறைந்தது உன்னிசை
வெகுளி மனதில் நிறைந்தது உன்னிசை
மரண ஓலத்தில் ஒலித்தது உன்னிசை
மகரந்த சேர்க்கையில் ஒலித்தது உன்னிசை
மதுவின் சிதறல்களில் ஒலித்தது உன்னிசை
மதியழகி இதயத்திலும் ஒலித்தது உன்னிசை
உன் மொழியாய் வருடியது உன்னிசை
உன் காதலாய் வருடியது உன்னிசை
உன் அழைப்பாய் வருடியது உன்னிசை
உன்னவள் இதயத்திலும் வருடியது உன்னிசை
காதலன் வரவை உரைக்கிறதோ உன்னிசை
காதல் தேவையென சொல்கிறதோ உன்னிசை
காதலிக்க கற்றுத் தருகிறதோ உன்னிசை
காதலியாய் புதியவளை நாடுகிறதோ உன்னிசை
என்னை பைத்தியம் என்கிறதோ உன்னிசை
என்னை வைத்தியம் செய்கிறதோ உன்னிசை
என் மதியை மயக்குமா உன்னிசை
என் விதியை வெல்லுமா உன்னிசை
Saturday, August 04, 2007
விண்ணப்பித்தேன்
சளைக்காமல் காடுகளில் திரிந்தேன்
இலவசமாய் பூக்களை முகர்ந்தேன்
இனிப்பான இல்லமதில் வசித்தேன்
உல்லாசத் தேனீயாய் வாழ்ந்தேன்
புரியாமல் பறந்து உழைத்தேன்
சுறுசுறுப்பாய் என்னை வளைத்தேன்
மாளிகையை நிரப்பி ரசித்தேன்
தேனடையில் உயிரை வைத்தேன்
மனிதனின் சுயநலம் உணர்ந்தேன்
என்னுழைப்பை காத்திட விழைந்தேன்
அழிக்கும் கோபத்தில் விழுந்தேன்
உணர்வினை அறவே துறந்தேன்
இழப்பின் வருத்தத்தில் கொதித்தேன்
கடித்திட்டு வென்றிட நினைத்தேன்
புயலென எண்ணமதை முடித்தேன்
வெற்றிக் களிப்பில் திளைத்தேன்
ஆ! மூச்சின் தடுமாற்றத்தில் அழுதேன்
உணர்வுகளின் ஒடுக்கத்தில் ஒளிந்தேன்
அன்பின் மகத்துவம் அறிந்தேன்
புரிந்தும் வாழ்வினை தொலைத்தேன்
தத்துவம் கேளாமல் வளர்ந்தேன் (எனினும்)
மன்னிப்பே வெற்றியென உணர்ந்தேன்
இறப்பினில் ஒளியினை அறிந்தேன்
சுருண்ட உடலாய் உறைந்தேன்
சினத்தின் வேகமது வேண்டேன்
மன்னிக்கா குணமது வேண்டேன்
தேனீயாய் மறுபிறவி வேண்டேன்
என்றே இறைவனிடம் விண்ணப்பித்தேன்
நிறைவாய் மனதினுள் சிரித்தேன்
தேனீயாய் வாழ்வினை முடித்தேன்
காற்றினில் உயிரைக் கலந்தேன்
இனிமையின் சாரத்தில் மறைந்தேன்
இலவசமாய் பூக்களை முகர்ந்தேன்
இனிப்பான இல்லமதில் வசித்தேன்
உல்லாசத் தேனீயாய் வாழ்ந்தேன்
புரியாமல் பறந்து உழைத்தேன்
சுறுசுறுப்பாய் என்னை வளைத்தேன்
மாளிகையை நிரப்பி ரசித்தேன்
தேனடையில் உயிரை வைத்தேன்
மனிதனின் சுயநலம் உணர்ந்தேன்
என்னுழைப்பை காத்திட விழைந்தேன்
அழிக்கும் கோபத்தில் விழுந்தேன்
உணர்வினை அறவே துறந்தேன்
இழப்பின் வருத்தத்தில் கொதித்தேன்
கடித்திட்டு வென்றிட நினைத்தேன்
புயலென எண்ணமதை முடித்தேன்
வெற்றிக் களிப்பில் திளைத்தேன்
ஆ! மூச்சின் தடுமாற்றத்தில் அழுதேன்
உணர்வுகளின் ஒடுக்கத்தில் ஒளிந்தேன்
அன்பின் மகத்துவம் அறிந்தேன்
புரிந்தும் வாழ்வினை தொலைத்தேன்
தத்துவம் கேளாமல் வளர்ந்தேன் (எனினும்)
மன்னிப்பே வெற்றியென உணர்ந்தேன்
இறப்பினில் ஒளியினை அறிந்தேன்
சுருண்ட உடலாய் உறைந்தேன்
சினத்தின் வேகமது வேண்டேன்
மன்னிக்கா குணமது வேண்டேன்
தேனீயாய் மறுபிறவி வேண்டேன்
என்றே இறைவனிடம் விண்ணப்பித்தேன்
நிறைவாய் மனதினுள் சிரித்தேன்
தேனீயாய் வாழ்வினை முடித்தேன்
காற்றினில் உயிரைக் கலந்தேன்
இனிமையின் சாரத்தில் மறைந்தேன்
Tuesday, June 12, 2007
எம்மையும் வாழ்த்திய உள்ளங்களின் அழகிய சொற்றோடைகள்
முத்தமிழ் மன்றத்தில் ஆமையாய், நத்தையாய் நான் இட்ட 2000 பதிவுகளுக்காக எம்மை வாழ்த்திய அன்புள்ளங்களின் வாழ்த்துப்பா படித்து மெய்சிலிர்த்து, கண் நிறைந்து, இதயம் குதூகலித்து, மனம் நிறைந்தது.....
அவை உங்கள் பார்வைக்கு.....
ஆக்கம் - சூரியகாந்தி
பார்க்கும் பரிமாணங்கள் பல்விதம்
ஈர்க்கும் பல்குணங்கள் மெல்லிதம்
இயற்றும் வார்த்தைகள் மெல்லிசை
இயற்றா எண்ணங்கள் பேரோசை!
ஞாலவாழ்க்கையிலும் ஞானதாகம்
காலமெல்லாம் கிருஷ்ணகானம்
கீதையிசைக்கும் கானகத் தேகாந்தகுயில்
கதைத்தாலோ மூங்கில் புல்லாங்குழல்
எதையும் இதமாய் பொறுக்கும் இதயம்
பிறர் துயர்துடைக்க உருகும் இமயம்
அம்புசம் அவர் அன்பே அங்குசம்
பரிவிலே நன்னீரருளும் வெண்மேகம்!
அன்பர்களின் இஷ்டசக்தி உந்துசக்தி
அணைப்பதிலே உ(ஒ)ப்பில்லா நீளகடலலை
அறிவிலே அமைதியான ஆழ்கிணறூற்று
அன்பிலே பொங்கியோடும் அமுதசுரபி!
அன்புக் குளந்தேங்கிய இதயக்கமலமே,
உம்மமல அன்புக் குளமேங்குமே!
ஆக்கம் – இலங்கை பெண்
அன்பு எனும் மூன்றெத்திற்கு
ஆர்வம் எனும் நான்கெழுத்து சேர்த்து
இன்பத்தோடு வலம் வரும் உறவு
ஈதலில் பெரும் மனம் உடையவர்
உண்மையை என்றும் பேசுபவர்
ஊக்கமளிப்பதில் சலிக்காதவர்
என்றும் என் மனதில் இருப்பார்
ஏற்றத்துடன் வாழ்ந்திட வேண்டும்
ஐயமின்றி சொல்லலாம் சாதனை பெண்ணே
ஒற்றுமையை நாளும் கடைப்பிடிப்பவர்
ஓங்கார புன்னகை வீசும் நல்லுள்ளம்
ஔடதமாக எனக்கு அறிவுரை கூறிடும் அக்கா
அஃதே நாளும் வாழ்வில் சாதனைகள் படைக்கட்டும்
ஆக்கம் - ரத்தினகிரி
கவிக்குயிலுக்கு நல்லதாம் வாழ்த்தை
நவில்ந்திடவே விரைந்து வந்தேன்
புவியினில் பொங்கிய அமுதமாய்
கவியினில் சிறந்தார் மங்கைநல்லார்
பாசுரங்கள் போலவே
ஆசுகவி தந்திடுவார்
மாசுஇல் கண்ணனுடன்
பேசு(ம்)வல் லமையுடனே
பணிவிலே பேர் போனவர் கண்ணன்
அணிந்திடும் மணி ஆனவர் மனந்
தணிந்து போமாறு மாகவி சொல்லி
துணிந்து மரணம் வெல்வகை செய்வரே.
ஆக்கம் - காகிதன்
பார்ப்பவர் நெஞ்சத்தை ஈர்ப்பவர் நீங்கள்
பார்வையால் பாசத்தை ஈபவர் நீங்கள்
பாரிலே போரிட பிறந்தவர் நீங்கள்
பார்கடல் முத்துபோல் கிடைத்தவர் நீங்கள்
சாதனை செய்திட பிறந்தவர் நீங்கள்
சாதக சூழலை அமைப்பவர் நீங்கள்
கீதையை கீதமாய் புனைந்தவர் நீங்கள்
பத்மஜா உங்களை வாழ்த்துவோம் நாங்கள்
ஆக்கம் - மூர்த்தி
கீதையைப் பயிற்று வித்த
ஆன்மீக மேதை!
அறிவுக் கண்ணைத்
திறந்திட்ட எங்கள்
மன்றத்துச் சொந்தம்...
சீர்மிகு கவிதைகளை
பார்போற்ற தந்திட்ட
சிந்தனைச் சுரங்கமவர்!...
ஆக்கம் - வெங்கடரங்கன்
பாமாலை சூட்டிட பக்தியோடு வந்திங்கு
உம்மை வணங்கியே பல பக்த உள்ளங்கள்
வாழ்த்தி பாடிச் சென்ற கவியது கண்டு
மெய் சிலிர்க்கிறது மேன்மை கண்டே
வணங்கியே பழகிப்போன என் கைகளுக்கு
வாழ்த்துப்பா எழுதிட வரம் வேண்டி
கண்ணீருடன் கேட்கிறேன்
கண்ணனை எனக்கும் தாருங்கள்
அவன் அருளின்றி அ கூட என்னால்
வரைந்து வைக்க முடியாது
வியக்க வைக்கும் விசயங்கள் சொல்லி
மயக்கம் போக்கிய மாயவனின் தோழியே
தங்களின் நட்பை பெற்றதால்
எங்கள் வாழ்வும் பலன் பெற்றது
எப்போதும் தங்களுடன் பயணிக்கும் பாக்கியம்
எமக்கு அருள்வீராக
வணங்குகிறேன் கண்ணனின் ராதையே.

Monday, June 11, 2007
அணைப்பில் பக்தி

வெண்மையும் கருமையும் சேர்ந்து நிற்கும்
இளமையும் முதுமையும் அணைத்து நிற்கும்
ஏழ்மையும் செழிப்பும் கலந்து நிற்கும்
பக்தையும் கண்ணனும் புரிந்து நிற்கும்
துளசி மணிமாலை கழுத்திலே நிற்கும்
ஹரே கிருஷ்ண நாமம் நெற்றியில் நிற்கும்
விதவையும் குமரியும் மகிழ்ந்து நிற்கும்
ராதைகள் கண்ணனுக்காக ஏங்கி நிற்கும்
குள்ளமும் உயரமும் புரிந்து நிற்கும்
வியர்வையும் சுகந்தமும் சுகித்து நிற்கும்
பகலென்றும் இரவென்றும் பாராது நிற்கும்
அன்பென்ற கடலில் குளித்து நிற்கும்
அறிவும் அனுபவமும் அறிந்து நிற்கும்
பரிவும் பண்பும் இனித்து நிற்கும்
மலரும் பக்தியாய் ருசித்து நிற்கும்
கண்களில் கண்ணனை ஒளித்து நிற்கும்
வேறுபாடு காணா உள்ளம் நிற்கும்
பகுத்தறிவால் வாதிடா நெஞ்சம் நிற்கும்
இதயத்தில் பக்தியெனும் மார்க்கம் நிற்கும்
உயிரே கண்ணனாய் மாறி நிற்கும்
தனிநடைப் பிரவாகம்
வினைதாங்கும் பார்வையினை விட்டோடும் அவசரத்தில்
பளீரிடும் மேடைச்சிரிப்புகளை ஒதுக்கும் ஆர்வத்தில்
எண்ணங்களெனும் முள்படுக்கையில் ஓரமாய் தலைசாய்த்தேன்
மௌனமான உணர்வுகளின் அதிவேக தாக்கத்தில்
நிலவின் குளுமையை உணரும் ஏக்கத்தில்
நிலம்பார்த்து கால்பதித்து எழுந்து நின்றேன்
அண்டமெனும் மாயைத் தாங்கிய உண்மையில்
பலவண்ண பூச்சிகளின் நளின நாட்டியத்தில்
கலைவண்ண முலாமின் மூலம்தனைக் கண்டேன்
மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து படபடத்த கண்களோ
கவியுலகிலே முத்துக் குளித்து நிலைத்தாலும்
நெஞ்சினுள் திணிக்காத பெருந்தன்மை உணர்ந்தேன்
அழியா அன்பின் கதவுகளை தொட்டுவிட
அருள்புரிந்து அரவணைக்கும் கைகளை பற்றிவிட
காலடிச் சந்தங்கள் பிறழ்வதில் வருந்தினேன்
வேடம் போடும் புத்திசாலி முகத்துடன்
சிகரத்தில் ஜொலித்த ஒளியின் பிரவாகத்தில்
வெறுப்புமிழா தேவதை முகமொன்றில் லயித்தேன்
காலத்தின் கட்டாயத்தை உடைத்தெறியும் பயணத்தில்
என்னன்பு நெய்தலில் உவகையுடன் கைக்கோர்க்க
சலிப்புணரா உயர் நட்பினைத் தேடியலைந்தேன்
சுட்டெரிக்கும் முகங்களை வழிமுழுதும் கண்டதால்
பாலைவனத் தனிமையை விருப்புடன் ஏற்று
சொர்க்கவாசல் காணும் கனவுடன் விரைந்தேன்
வேகநடை பயிலாத நானே இன்று
ஒற்றையடி பாதையில் மூச்சிறைத்து நின்றபோது
அன்புமுகம் மலர்வதில் மகிழ்ந்து சிலிர்த்தேன்
விதி செய்யும் விளையாட்டினை ஆராய்ந்து
சதியான எண்ணங்களில் இருந்து விடுதலையடைய
புறாவாய் சிறகினை விரிக்கத் துடித்தேன்
என்னுணர்வு புரிந்து தட்டிக்கொடுத்த முகத்தின்
கைகளை நன்றியுடன் பற்றிய வண்ணம்
கண்ணீர் மல்க மண்டியிட்டு முத்தமிட்டேன்
என்னகம் திரும்ப வேண்டியதை நினைவுறுத்தி
தனித்த பயணம் சோலையாய் திகழ
அம்முகம் எந்நெஞ்சிலே இறங்கியதில் கிளர்ந்தேன்

என்னைக் காதலித்துப் பார் – பார்வை மூன்று
அசைந்தாடும் காகிதக் கப்பலில் ஒன்றமர்ந்து
மாற்றமில்லா காதல்கதை பேசிக் களித்திடுவோம்
ராதையே, என்னுடன் பேசிப் பார்
இலையின் விரிப்பில் நானும் நீயும்
கைபிடித்து கண்விரித்து உலகமே உலாவருவோம்
ராதையே, என் கைப்பிடித்துப் பார்
நிழல்களின் குளுமையில் ஒதுங்கி நின்று
நிஜங்களின் உண்மையில் உரக்க சிரித்திடுவோம்
ராதையே, என்னுடன் சிரித்துப் பார்
காவியங்கள் விக்கிசொல்லும் காதலை நகர்த்திவிட்டு
எழுத்துருவின் வளைவுகளில் உணர்ந்து நிற்போம்
ராதையே, என்னிதயத்தை உணர்ந்துப் பார்
பிரிவினால் பொங்கிவரும் விழிநீரின் உள்ளமர்ந்து
பிரிவில்லா வாழ்வதனை வாழக் கற்போம்
ராதையே, என்னுடன் வாழ்ந்துப் பார்
உளிவழியே செதுக்கி வைத்த அன்பினாலே
மதிவதன சித்திரமாய் காலத்தில் உறைந்திடுவோம்
ராதையே, என்னை ஏற்றுப் பார்
புறக்கணித்த கோபத்தில் உன்முகம் சிவக்க
புவியீர்ப்பின் ரகசியம் உணர்த்தவே வந்துள்ளேன்
ராதையே, என்னை ஏறெடுத்துப் பார்
எட்டுதிக்கு லீலைபுரியும் கண்ணனாய் நானிருந்தும்
மௌனமான உன்னைமட்டும் வேண்டி தவமிருப்பேன்
ராதையே, என்னை சிறிது காதலித்துப் பார்
வெற்றிடத்திற்கு என்னைவிட்டு ஓட நினைத்தாலும்
விட்டுச்செல்லா காதலனாய் எங்கெங்கும் நானிருப்பேன்
ராதையே, என்னை மட்டும் சிறிது காதலித்துப் பார்

Thursday, April 19, 2007
உன்னிடம் என்னக் கண்டேன்?
உன் குரலிலே காந்தம் கண்டேன்
உன் இசையிலே இனிமைக் கண்டேன்
உன் மொழியிலே ரசனைக் கண்டேன்
உன் ராகத்திலே கலையைக் கண்டேன்
உன் பாவத்திலே உருக்கம் கண்டேன்
உன் கானத்திலே விருப்பம் கொண்டேன்
உன் பக்தியிலே இறையைக் கண்டேன்
உன் பாட்டிலே சிரத்தை கண்டேன்
உன் நடையிலே இசையைக் கண்டேன்
உன் அசைவுகளே இசைப்பதைக் கண்டேன்
உன் காதலே இசையாய் கண்டேன்
உன் அதிர்வுகளே இசையென்றுக் கண்டேன்
உன் ஓசையிலும் அழகினைக் கண்டேன்
உன் உருவம் நிலைக்கக் கண்டேன்
உன் புகழை வானளவுக் கண்டேன்
உன் சிறப்பே நீயெனக் கண்டேன்
[This poem was read out in Bahrain FM 104.2 on 17/04/2007]

கண்டேன் கண்டேன்
விழியிலே காந்தம் கண்டேன்
மொழியிலே ரசனைக் கண்டேன்
எழிலகம் மனதில் கண்டேன்
யாழிசை இனிமைக் கண்டேன்
சிரிப்பிலே மகவைக் கண்டேன்
உரிமையாய் நெருங்கக் கண்டேன்
கரிசனம் நெஞ்சில் கண்டேன்
தரிசனம் வேண்டக் கண்டேன்
நடையிலே மென்மைக் கண்டேன்
உடையிலே எளிமைக் கண்டேன்
ஓடையில் நனையக் கண்டேன்
தடையிலே தவிப்பைக் கண்டேன்
காதலில் பாசம் கண்டேன்
மோதலில் கோபம் கண்டேன்
மாதமும் கடக்கக் கண்டேன்
வேதனை நிலைக்கக் கண்டேன்
ஆணவம் களையக் கண்டேன்
உணர்வுகள் மதிக்கக் கற்றேன்
இணக்கமுடன் வாழக் கற்றேன்
பிணக்கத்தை எதிரியாய் கண்டேன்
அடியிலே இரும்பைக் கண்டேன்
மடியிலே மரணம் கண்டேன்
நடிகனாய் நடிக்கக் கண்டேன்
கடினமில்லா வாழ்வைக் கண்டேன்
கனவிலே அன்பைக் கண்டேன்
நனவிலே அன்பைக் கண்டேன்
இனங்களில் அன்பைக் கண்டேன்
மனங்களில் அன்பைக் கண்டேன்
கலக்கத்தில் அன்பைக் கண்டேன்
பலத்திலும் அன்பைக் கண்டேன்
உலகத்தை அன்புடன் கண்டேன்
இலக்கமே அன்பாய் கண்டேன்
மொழியிலே ரசனைக் கண்டேன்
எழிலகம் மனதில் கண்டேன்
யாழிசை இனிமைக் கண்டேன்
சிரிப்பிலே மகவைக் கண்டேன்
உரிமையாய் நெருங்கக் கண்டேன்
கரிசனம் நெஞ்சில் கண்டேன்
தரிசனம் வேண்டக் கண்டேன்
நடையிலே மென்மைக் கண்டேன்
உடையிலே எளிமைக் கண்டேன்
ஓடையில் நனையக் கண்டேன்
தடையிலே தவிப்பைக் கண்டேன்
காதலில் பாசம் கண்டேன்
மோதலில் கோபம் கண்டேன்
மாதமும் கடக்கக் கண்டேன்
வேதனை நிலைக்கக் கண்டேன்
ஆணவம் களையக் கண்டேன்
உணர்வுகள் மதிக்கக் கற்றேன்
இணக்கமுடன் வாழக் கற்றேன்
பிணக்கத்தை எதிரியாய் கண்டேன்
அடியிலே இரும்பைக் கண்டேன்
மடியிலே மரணம் கண்டேன்
நடிகனாய் நடிக்கக் கண்டேன்
கடினமில்லா வாழ்வைக் கண்டேன்
கனவிலே அன்பைக் கண்டேன்
நனவிலே அன்பைக் கண்டேன்
இனங்களில் அன்பைக் கண்டேன்
மனங்களில் அன்பைக் கண்டேன்
கலக்கத்தில் அன்பைக் கண்டேன்
பலத்திலும் அன்பைக் கண்டேன்
உலகத்தை அன்புடன் கண்டேன்
இலக்கமே அன்பாய் கண்டேன்
Friday, April 13, 2007
உறைந்த கட்டங்கள்
அரங்கமே மின்னொளியால் குளிக்க
ரசிகர்களும் பண்பாய் அமர
அந்நாளின் காவியத்தைக் காண
மேடையும் தயாராய் நின்றதுவே
பரப்பரப்பின் உச்சத்தில் நின்றபடி
அக்காவியத்தின் நாயகரை கண்டுவிட
அரங்கமும் எதிர்பார்ப்பில் அதிர்ந்தபடி
வரவேற்பை தந்து மகிழ்ந்ததுவே
மூச்சையடக்கி காத்திருந்த மக்களின்
அசைவற்ற அவ்விடத்தின் அமைதியோ
உலகின் உன்னத இசைக்குழுவின்
ஸ்வரங்களைவிட சிறந்து இசைத்தனவே
கூட்டத்தின் நெருக்கடியில் நானும்
மெல்ல மெல்ல நடந்துவந்து
அக்கம்பக்கம் முறைப்பை தவிர்க்க
ஓரமாய் ஒதுங்கி அமர்ந்தேனே
ஒளியணைத்த அரங்கில் இனி
நாடகத்தை கண்டுவிடும் துடிப்பில்
மக்களும் ஆரவாரமாய் கைதட்ட
திரையும் சிறிதுசிறிதாய் விலகியதே
மான் விழி மிரட்சியுடன்
மலரினும் மென்மையாய் திகழ்ந்த
அழகான பெண்ணொருத்தி வந்து
மேடையில் மலர்ந்து நின்றனளே
கேவலின் இடையிலும் சிரித்தபடி
வேதனையிலும் நடனமாடி களித்தபடி
குயிலாய் ரசித்து பாடியபடி
சுயசரிதையை படம்பிடித்து காட்டினாளே
அவள் உள்ளத்தின் அழகினிலே
அரங்கமே அதிசயித்து மயங்க
நடிப்பை நிறுத்தி சிறிதே
அங்குமிங்கும் நடந்து சென்றனளே
தோற்ற வாழ்வினைக் கண்டு
மனமிரங்கி இதயம் கசிந்து
கண்ணீரால் வரைந்த முகங்களை
நானும் கண்டு கொண்டேனே
சலிப்பின்றி அலுப்பின்றி நடந்து
தள்ளாடி தடுமாறி உடைந்து
இறுதியில் விழுந்தவளைக் கண்டு
என் கண்களும் கலங்கினவே
விறகுகள் முட்டுக் கொடுக்க
அவளுடலும் அதில் அமைதியுற
அக்னியின் ஆசைக்கு அளவின்றி
வளர்ந்து உயர்ந்து அணைத்தனவே
கல்நெஞ்சும் உருகும் இந்நிகழ்ச்சியை
தோல்வியில் முடிந்த இவ்வாழ்வை
கைத்தட்டி மரியாதை தந்தாலும்
நல்ல நாடகம் என்றே கதைத்தனரே
நுண்ணிய உணர்வுகளையும் கூட
அபாரமாய் வெளிப்படுத்தி நடித்த
அப்பெண்ணை உயர்த்தி பேசியே
ஒருவர் உரக்க உருகினாரே
முடிவில் திரையும் விழுந்துவிட
வாசலை நோக்கி ஓடிய
ரசிகர்களும் தத்தம் உலகை
காணவே விரைந்து ஓடினரே
நடிகர்கள் அனைவரும் சென்றுவிட
விளக்குகள் அனைத்தும் அணைந்துவிட
கதவும் மூடப்பட்ட நிலையில்
இருட்டிலே தனிமையில் விடப்பட்டேனே
காலமெனும் உறைந்த கட்டங்களில்
சோகமெனும் நெஞ்சின் ரணங்களில்
துளிகளாய் இருசொட்டு கண்ணீரால்
என் முகமும் அலங்கரித்தனவே
உணர்ந்தேன் நானே நாயகியென
சிலிர்த்தேன் அரங்கேறியது என்வாழ்வென
நடித்தேன் நேர்த்தியாய் அழகுடனென
என் தட்டலில் அரங்கமே அதிர்ந்ததுவே
புன்னகை முகத்தில் தவழ
உடலற்று எழுந்து நின்று
உயிராய் சுவற்றைக் கிழித்து வெளியே
வீசுதென்றலில் விடுதலை உணர்ந்தேனே
ரசிகர்களும் பண்பாய் அமர
அந்நாளின் காவியத்தைக் காண
மேடையும் தயாராய் நின்றதுவே
பரப்பரப்பின் உச்சத்தில் நின்றபடி
அக்காவியத்தின் நாயகரை கண்டுவிட
அரங்கமும் எதிர்பார்ப்பில் அதிர்ந்தபடி
வரவேற்பை தந்து மகிழ்ந்ததுவே
மூச்சையடக்கி காத்திருந்த மக்களின்
அசைவற்ற அவ்விடத்தின் அமைதியோ
உலகின் உன்னத இசைக்குழுவின்
ஸ்வரங்களைவிட சிறந்து இசைத்தனவே
கூட்டத்தின் நெருக்கடியில் நானும்
மெல்ல மெல்ல நடந்துவந்து
அக்கம்பக்கம் முறைப்பை தவிர்க்க
ஓரமாய் ஒதுங்கி அமர்ந்தேனே
ஒளியணைத்த அரங்கில் இனி
நாடகத்தை கண்டுவிடும் துடிப்பில்
மக்களும் ஆரவாரமாய் கைதட்ட
திரையும் சிறிதுசிறிதாய் விலகியதே
மான் விழி மிரட்சியுடன்
மலரினும் மென்மையாய் திகழ்ந்த
அழகான பெண்ணொருத்தி வந்து
மேடையில் மலர்ந்து நின்றனளே
கேவலின் இடையிலும் சிரித்தபடி
வேதனையிலும் நடனமாடி களித்தபடி
குயிலாய் ரசித்து பாடியபடி
சுயசரிதையை படம்பிடித்து காட்டினாளே
அவள் உள்ளத்தின் அழகினிலே
அரங்கமே அதிசயித்து மயங்க
நடிப்பை நிறுத்தி சிறிதே
அங்குமிங்கும் நடந்து சென்றனளே
தோற்ற வாழ்வினைக் கண்டு
மனமிரங்கி இதயம் கசிந்து
கண்ணீரால் வரைந்த முகங்களை
நானும் கண்டு கொண்டேனே
சலிப்பின்றி அலுப்பின்றி நடந்து
தள்ளாடி தடுமாறி உடைந்து
இறுதியில் விழுந்தவளைக் கண்டு
என் கண்களும் கலங்கினவே
விறகுகள் முட்டுக் கொடுக்க
அவளுடலும் அதில் அமைதியுற
அக்னியின் ஆசைக்கு அளவின்றி
வளர்ந்து உயர்ந்து அணைத்தனவே
கல்நெஞ்சும் உருகும் இந்நிகழ்ச்சியை
தோல்வியில் முடிந்த இவ்வாழ்வை
கைத்தட்டி மரியாதை தந்தாலும்
நல்ல நாடகம் என்றே கதைத்தனரே
நுண்ணிய உணர்வுகளையும் கூட
அபாரமாய் வெளிப்படுத்தி நடித்த
அப்பெண்ணை உயர்த்தி பேசியே
ஒருவர் உரக்க உருகினாரே
முடிவில் திரையும் விழுந்துவிட
வாசலை நோக்கி ஓடிய
ரசிகர்களும் தத்தம் உலகை
காணவே விரைந்து ஓடினரே
நடிகர்கள் அனைவரும் சென்றுவிட
விளக்குகள் அனைத்தும் அணைந்துவிட
கதவும் மூடப்பட்ட நிலையில்
இருட்டிலே தனிமையில் விடப்பட்டேனே
காலமெனும் உறைந்த கட்டங்களில்
சோகமெனும் நெஞ்சின் ரணங்களில்
துளிகளாய் இருசொட்டு கண்ணீரால்
என் முகமும் அலங்கரித்தனவே
உணர்ந்தேன் நானே நாயகியென
சிலிர்த்தேன் அரங்கேறியது என்வாழ்வென
நடித்தேன் நேர்த்தியாய் அழகுடனென
என் தட்டலில் அரங்கமே அதிர்ந்ததுவே
புன்னகை முகத்தில் தவழ
உடலற்று எழுந்து நின்று
உயிராய் சுவற்றைக் கிழித்து வெளியே
வீசுதென்றலில் விடுதலை உணர்ந்தேனே
Friday, April 06, 2007
நளினம் எது?
நெற்றியில் தவழும் கூந்தலா
இழுக்கும் மென்மை விரல்களா
மயக்கும் அழகு உடலா
அன்பை சொரியும் விழியா
முடியை கோதும் அழகா
தென்றலில் பறக்கும் புடவையா
சிரிப்பில் தெரியும் கன்னக்குழியா
சுவைக்கும் இனிமைக் குரலா
உடையில் வெளிபடும் அடக்கமா
நிலம் அதிராத நடையா
மெல்லினமாய் பூக்கும் புன்சிரிப்பா
பாசத்தில் தழும்பும் கண்ணீரா
உரிமையுடன் உறவாடும் அழகா
உதவும் நேசக் கரமா
கசப்பை ஏற்கும் அமைதியா
குதூகலிக்கும் குழந்தை உள்ளமா
இயற்கையை விரும்பும் ரசனையா
ஏங்கும் இதயக் காதலா
அசட்டை செய்யாத குணமா
கலங்கும் மனித நேயமா
எழுத்தில் ஒளிரும் மென்மையா
பிரிக்கத் தெரியாத இதயமா
கோபம் அறியாத மனமா
தவழ்ந்து பயிலும் விருப்பமா
வஞ்சம் இல்லாத நெஞ்சமா
வருவதை ஏற்கும் மௌனமா
புரிந்து கொள்ளும் பொறுமையா
ஒதுங்கி போகும் அடக்கமா
தனித்தனியே இருப்பது நளினமா
சேர்ந்தே நடைபயில்வது நளினமா
இவையின்றி இருப்பதும் நளினமா
நளினமே வெறும் கட்டுக்கதையா
இழுக்கும் மென்மை விரல்களா
மயக்கும் அழகு உடலா
அன்பை சொரியும் விழியா
முடியை கோதும் அழகா
தென்றலில் பறக்கும் புடவையா
சிரிப்பில் தெரியும் கன்னக்குழியா
சுவைக்கும் இனிமைக் குரலா
உடையில் வெளிபடும் அடக்கமா
நிலம் அதிராத நடையா
மெல்லினமாய் பூக்கும் புன்சிரிப்பா
பாசத்தில் தழும்பும் கண்ணீரா
உரிமையுடன் உறவாடும் அழகா
உதவும் நேசக் கரமா
கசப்பை ஏற்கும் அமைதியா
குதூகலிக்கும் குழந்தை உள்ளமா
இயற்கையை விரும்பும் ரசனையா
ஏங்கும் இதயக் காதலா
அசட்டை செய்யாத குணமா
கலங்கும் மனித நேயமா
எழுத்தில் ஒளிரும் மென்மையா
பிரிக்கத் தெரியாத இதயமா
கோபம் அறியாத மனமா
தவழ்ந்து பயிலும் விருப்பமா
வஞ்சம் இல்லாத நெஞ்சமா
வருவதை ஏற்கும் மௌனமா
புரிந்து கொள்ளும் பொறுமையா
ஒதுங்கி போகும் அடக்கமா
தனித்தனியே இருப்பது நளினமா
சேர்ந்தே நடைபயில்வது நளினமா
இவையின்றி இருப்பதும் நளினமா
நளினமே வெறும் கட்டுக்கதையா
மனமும் இதயமும் – உரையாடல் மூன்று
[அன்று செவ்வாய்கிழமை. கவிஞன் திரைபடம் காண திரையரங்கு செல்கிறான். இடைவேளை வருகிறது. வெளியே செல்லாமல் அங்கேயே அமர்ந்திருக்கிறான். அச்சமயம் அவன் மனமும், இதயமும் பேசுவதை கவனிக்க தொடங்குகிறான்....]
மனம் : இதயமா? நீயெங்கே இங்கே?
இதயம் : ஏன்? இங்கு நான் வரக் கூடாதா? சரி. அதை விடு. எப்படி இருக்கிறாய்?
மனம் : நன்றாக இருக்கிறேன். நீ?
இதயம் : நானும்
(மௌனமாய் சில கணங்கள் கழிகிறது.....)
மனம் : ஏன் அமைதியாகிவிட்டாய்?
இதயம் : ஒன்றுமில்லையே
மனம் : சென்ற முறை பேசிய தத்துவங்கள் கேட்டு இதையெல்லாம் நீ விரும்பமாட்டாய் என்று நினைத்தேன்
இதயம் : அது உன் தவறு. நான் புறவுலகையும் அகவுலகையும் ரசிப்பவள்
மனம் : உன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே
இதயம் : தத்துவம் பேசினால் திரைபடத்தை ரசிக்கக் கூடாது என்று எங்கேயாவது சொல்லப்பட்டிருக்கிறதா என்ன?
மனம் : அது சரி. திரையில் காண்பவைக் கண்டு நிலை தவற மாட்டாயா?
இதயம் : இல்லையென்று நினைக்கிறேன்
யாரோ ஒரு குரல் : இதயமே, உண்மைதானா?
மனம், இதயம் : யார் நீ?
யாரோ : என்னைப் பற்றி இருக்கட்டும். ஏதோ பேசிக் கொண்டிருந்தீர்களே….உங்கள் உரையாடல்களை நானும் பல வருடங்களாக கேட்டவன் என்ற முறையில்.............
மனம் : என்ன திமிர்? ஒட்டு கேட்பது தவறல்லவோ?
யாரோ : என்னிடம் அதைப் பற்றி நீ சொல்லாதே. ஹி ஹி... (இருவரையும் பார்த்து) நான் உங்கள் முகமறியா உறவினன்.
இதயம் : சரி. என்ன வேண்டும் உனக்கு?
யாரோ : உங்கள் இருவரிடமும் சில கேள்விகளைக் கேட்க வேண்டும். யாரை முதலில் கேட்கட்டும்?
மனம் : இதயம் ஒத்துக் கொண்டதால் நீ பிழைத்தாய். என்னை முதலில் கேள்
யாரோ : நன்றி. ஆரம்பிப்போமா?
மனம் : சரி
யாரோ : கவனமாகக் கேட்டு பதில் கூறு
மனம் : (அலட்சியமாக) சீக்கிரம் கேள். எங்கள் இருவருக்கும் பேச வேண்டியது நிறைய இருக்கிறது
யாரோ : (நமுட்டு சிரிப்புடன்) அது எனக்கு தெரியும்
(இதயம் அங்கிருந்து நகர்கிறாள்)
யாரோ : நீ எப்பொழுது பிறந்தாய்?
மனம் : (யோசித்துவிட்டு) தெரியாது
யாரோ : உன் இறப்பைப் பற்றித் தெரியுமா?
மனம் : .............. தெரியாது
யாரோ : இதைப் பற்றி யாராவது உனக்கு கூறினார்களா?
மனம் : இல்லை
யாரோ : ஏன் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை?
மனம் : எனக்கு தோன்றவில்லை
யாரோ : நீ யார் என்பதாவது தெரியுமா?
மனம் : ஆம். நான் ‘மனம்’
யாரோ : ‘மனம்’ என்றால்?
மனம் : எண்ணக் கலவை நான்
யாரோ : எந்த நிறக்கலவை?
மனம் : (பெருமையுடன்) அனைத்து நிறமும் உண்டு
யாரோ : எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன?
மனம் : பார்ப்பவை, கேட்பவை, ரசிப்பவை – இவையே எண்ணங்களின் மூலம் ஆகின்றன
யாரோ : அப்படியா? நன்று. யார் பார்க்கிறார்கள்? யார் கேட்கிறார்கள்?
மனம் : உடலின் கண்களும் செவியும்
யாரோ : அருமை. உன் வாழ்க்கை குறிக்கோள் என்ன?
மனம் : பெரிதாக ஒன்றுமில்லை. என்னை பன்மடங்காக பெருக்கிக் கொள்வதில் எனக்கு மிக்க ஆர்வம்
யாரோ : அப்படியெனில் பல வண்ணங்களில் பல பரிமாணங்களில் அனுதினமும் விரிவடைவாய் என்று சொல்?
மனம் : அப்படியும் வைத்துக் கொள்ளலாம்
யாரோ : எண்ணங்களை என்ன செய்கிறாய்?
மனம் : கவிஞனின் வாழ்க்கையில் கலக்கிறேன்
யாரோ : நல்லவையா, கெட்டவையா?
மனம் : எனக்கெப்படி தெரியும்?
யாரோ : அதுவும் சரிதான். கவிஞன் உன்னை மதிக்கிறானா?
மனம் : பல நேரங்களில். (குரலைத் தாழ்த்தி) சில நேரங்களில் இதயத்தை மிகவும் மதிக்கிறான்
யாரோ : உனக்கு இதயத்தின் மேல் காதல் அல்லவோ?
மனம் : உண்டு. ஆனால், என்னை அவள் வீழ்த்துவது எனக்கு பிடிக்கவில்லை
யாரோ : ஓ..... எண்ணங்களை எப்படி கவிஞன் வாழ்க்கையில் கலக்கிறாய்?
மனம் : அவனையும் அறியாமல் பலவித எண்ண அம்புகளை நானாவிதத்திலும் ஒரே நேரத்தில் எய்துகிறேன்
யாரோ : உன்னை புறக்கணிக்கும் பொழுது என்ன செய்கிறாய்? இதயம் தானே என்று விட்டுக் கொடுப்பாயா?
மனம் : (காதில் கிசுகிசுத்தபடி) மாட்டேன். என்னால் முடிந்தளவு கவிஞனை தொந்தரவு செய்வேன். ஒவ்வொரு முறையும் எனக்கே எனக்கு மட்டும் வெற்றி கிட்டும் வரை
யாரோ : இத்தனை கர்வமா? நல்லது. உன் தொந்தரவு தாங்காமல் உன்னை கொல்ல நினைத்தால்?
மனம் : அப்படியும் நடக்குமா?
யாரோ : வாய்ப்புண்டு.
மனம் : என்னை ஏன் பயமுறுத்துகிறாய்? நீ யார்?
யாரோ : பொறுத்திரு........... (சிரித்துக் கொண்டே இதயத்தை உற்று நோக்குகிறான். ஒரு மலரைப் போல் வந்து அமர்கிறாள் இதயம்)
யாரோ : (மென்மையாக) இதயமே, நலமா?
இதயம் : நலம் ஐயா
யாரோ : அன்னியனான என்னை எப்படி ஏற்றுக் கொண்டாய்?
இதயம் : என்னதான் கூறுகிறீர்கள் என்று கேட்போமே என்றுதான்
யாரோ : நன்று நன்று. மனதுடனான உன் உரையாடல்களை கேட்டு சிரித்து விட்டேன்
இதயம் : ஏன்? ஏதாவது தவறா?
யாரோ : தத்துவம் பேசியுள்ளாய். ஆனால் உண்மையில் நீ அப்படியா?
இதயம் : இருக்க முயல்கிறேன்
யாரோ : முயல்வது வேறு, இருப்பது வேறு. (சிரிக்கிறான்)
இதயம் : ..........................
யாரோ : சரி சரி. நான் உன்னை புகழ்ந்தால் என்ன செய்வாய்?
இதயம் : நன்றி கூறுவேன்
யாரோ : உன்னை அன்பு செய்தால்?
இதயம் : நெகிழ்வேன்
யாரோ : உன்னை இகழ்ந்தால்?
இதயம் : மிகவும் துன்பப்படுவேன் ஐயா
யாரோ : புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் அன்பிலும் தெறிக்கும் அகங்காரத்தை காணவில்லையா?
இதயம் : புரியவில்லையே
யாரோ : நீ எத்தனை அப்பாவியாக இருக்கிறாய். மிக்க மகிழ்ச்சி. ஆனால் கடந்த காலத்தில் வாழ்பவளோ?
இதயம் : செய்நன்றி மறப்பவளல்ல நான்
யாரோ : நிகழ்காலத்தில் வாழ்வது என்று எதை கூறுகிறாய்?
இதயம் : சந்தர்ப்பங்களும் காட்சிகளும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. அதற்கேற்ப நானும் இருக்கிறேன்
யாரோ : அப்படியெனில் அழுது கொண்டோ, சிரித்து கொண்டோ இருப்பாயோ?
இதயம் : (புன்முறுவல்) துன்பத்தில் நிச்சயம் வலியின் மிகுதியால் கண்ணீர் விடுவேன்
யாரோ : அப்படியா? மகிழ்ச்சியில் எங்ஙனம் உணர்வாய்?
இதயம் : பறப்பதைப் போல் உணர்வேன்
யாரோ : மயங்காதவள், ஏங்காதவள், கோபமில்லை, வஞ்சமில்லை ஆணவமில்லை என்றெல்லாம் மனதிடம் படம் விட்டிருக்கிறாயே, நான் ஒன்று கேட்கட்டுமா?
இதயம் : கேளுங்கள், ஐயா. தெரிந்தால் பதில் தருகிறேன்
யாரோ : உனக்கு பிடித்தோரை உன்னில் இருத்திக் கொள்கிறாய். வேண்டாதோரை ஒதுக்குகிறாய். இது எதனால்?
இதயம் : (முழிக்கிறாள்) நான் இப்படியே வளர்ந்து விட்டேன். மேலும் மனதின் சகவாசமும் தற்பொழுது கூடி விட்டது. அதனால்.........
யாரோ : உன்னைப் பற்றி மட்டும் கூறு. மனதை ஏன் இங்கு இழுக்கிறாய்?
இதயம் : மன்னிக்கவும். உங்களுக்கு தெரியுமா?
யாரோ : ம்ம்ம்ம்.... எனக்கு தெரியும். ஆனால் உன்னைப் பற்றி உனக்கே சரியாக தெரியவில்லை.
இதயம் : (தலைகுனிகிறாள்)
யாரோ : பரவாயில்லை. கவிஞனை மிகவும் பிடிக்குமோ?
இதயம் : ஆம்.
யாரோ : அப்படி வா வழிக்கு. எதனால்?
இதயம் : ‘நான்’ தான் கவிஞன் என்பதால்
யாரோ : ஓ.....அந்த கவிஞனின் உடல் அழிந்தால்?
இதயம் : ஹா....
யாரோ : பிறகு என்னாவாய் என்று தெரியுமா?
இதயம் : நானும் அழிய வேண்டியதுதான்
யாரோ : அவசியமில்லை
இதயம் : எப்படி சொல்கிறீர்கள்?
யாரோ : என்னருகில் இருப்பவளாயிற்றே நீ
இதயம் : அப்படியெனில் தங்களுக்கு அழிவில்லையா?
யாரோ : இல்லை
இதயம் : தாங்கள் யார்?
யாரோ : பொறுத்திரு...............
(இருவரையும் அழைக்கிறான் யாரோ)
யாரோ : உங்களுடன் அளவலாவியதில் மிக்க மகிழ்ச்சி.
மனமே, உன் அழிவு என்று நான் கூறியது உன் எண்ணங்களின் நிறங்களை. ஆம். அவை அனைத்தும் மறைந்து வெண்மையாகி விட வாய்ப்புண்டு நீ இதயத்துடன் சேர்ந்தால்.
இதயமே, உன் பலவீனமே, மனதின் சாயை உன் மேல் படிவதால்தான். மனதை தூய்மைப்படுத்து. உன் பலவீனம் தானாக மறைந்து விடும்.
உங்கள் காதல் அமரத்துவம் அடையட்டும்.
போவதற்கு முன் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நானின்றி நீங்கள் இல்லை என்பதை மட்டும் எப்பொழுதும் மறக்க வேண்டாம்.
சரி. நான் வரட்டுமா?
மனமும் இதயமும் : (மரியாதையுடன்) எங்கள் இருவரையும் சேர்த்து வைத்தவரே, நன்றி. தாங்கள் யார்?
யாரோ : நான்.... நான்..... நான்தான் உயிர்..... ஆன்மா.

உன் புல்லாங்குழல் எங்கே? - 3
காற்றில் தவழ்ந்து வரும் உன்னிசையால் உந்தப்பட்டு
மையிடவும் தலைபின்னவும் பட்டாடை உடுத்தவும் மறந்து
அலங்கோல நிலையில் நான் ஓடோடி வந்துனை காண
சிரித்துக் கொண்டே என் காதில் ஆடும் ஜிமிக்கியை ரசித்தபடி
என் குழலை ஒதுக்கி, அன்பு பொங்க என் கரம் பற்றி
அந்நிலவொளியில் என்னைக் கண்டதைத்தான் மறக்க முடியுமா?
அன்றொருநாள் தோழியருடன் அமர்ந்து சிரித்து மகிழும் நேரத்தில்
அவர்களுடன் காதல்மொழிதனை பேசியே உன் விழியால் என்னை அழைக்க
அங்கிருந்து தப்பித்து ஒரு சுனையின் அருகில் உனக்காக காத்திருந்த நேரம்
கலகலக்கும் கண்ணாடி வளையல்களை என் கைகளில் அடுக்கி
கண்ணீர் சிந்தும் என் கரம் பற்றியே அழகுப் புன்னகையுடன்
பட்டாம்பூச்சிகளை துரத்திய கணங்களைத்தான் மறக்க முடியுமா?
அனைவரும் படுத்துவிட்ட இரவு வேளையில் குயிலாய் கூவும்
உன் அழைப்பிதழை ஏற்று கள்ளத்தனத்துடன் உன்னை சந்திக்க நான் வர
என் கரம் பற்றி அமரச்செய்து மறைத்து வைத்திருந்த பொருளை வெளியே எடுத்து
அந்நிலவொளியில் என் கைகளில் சித்திரம் வரைய துவங்க
என்னதென்று பார்த்த என கண்களில் நீர், இதயத்தில் நிறைவு
எனக்கு மிகவும் பிடித்த மருதாணியை நீயிட்ட அந்நாளைத்தான் மறக்க முடியுமா?
உன்னை நினைத்தே பாறையில் அமர்ந்து கவிதை எழுதும் வேளையில்
பின்னிருந்து என் கண்மூடி பின்னலைப் பிடித்திழுத்து
செவிகளில் கலகலவென ஏதோவொன்றை ஒலிக்க செய்ய
கோபத்தில் அங்கிருந்து நடக்க எத்தனித்த என் கரம் பற்றி
கண்களால் மன்னிப்பு கோரி, என் கால்களில் கொலுசை அணிவிக்க
அங்கேயே அமர்ந்து மகிழ்ச்சியில் விம்மி விம்மி நான் அழுததைத்தான் மறக்க முடியுமா?
இதோ மூப்படைந்த நிலையிலும் ஒளிவீசும் நினைவுகளே
என் வாழ்க்கை துணையாக, வாழ்வை வண்ணமயமாக்க
அவ்வப்பொழுது என் இடுப்பில் செருகி வைத்திருக்கும்
உன் புல்லாங்குழல் எடுத்து நான் ஊதும் வேளையில்
நந்தவனத்து பறவைகளும் கறவைகளும் என்னை சூழ்கிறதே
இவ்வுலகமே சிலிர்க்கும் அளவு உரைப்பாய், ‘என் ராதையே குழலுக்கு இனியவள்’

உன் புல்லாங்குழல் எங்கே? - 2
ரத்தம் சதை உணவு மலம் அனைத்தையும்
தாங்கும் எலும்புகளை போர்த்திய தோல்
கண்ணாடியில் தெரியும் பொழுதெல்லாம்
பிரதிபலிக்கும் உருவம் என்னிடம் கேட்கிறது
உன் கண்ணன் காதலித்தது இதற்குதானா?
கூந்தலின் கருப்பு வெள்ளையையும்
அழுக்கைப் பற்றும் நகங்களையும் மறந்து
இளமையின் துள்ளலில் நீ என் கரம் பற்ற
உறைந்த அக்கணங்களே என்னிடம் கேட்கிறது
உன் கண்ணனின் காதல் இத்தனைதானா?
ருக்மிணியையும் சத்யபாமாவையும் சேர்த்து
பதினாறாயிரத்து எட்டு மனைவியரை
மணந்துகொண்டு சுகம் அனுபவிக்கும் உன்னைக் கண்ட
காற்று என்னிடம் ஏளனமாய் கேட்கிறது
உனக்கு பொறாமை ஏதேனும் உண்டா?
மனம் நிறைய ஆசைகளுடன் பாசம் சேர
பலவித எதிர்பார்ப்புகளுடன் அன்பு நடைபயில
இதயத்தை மோகமும் போகமும் கவ்வ
மனிதக்காதல் கண்சிமிட்டி என்னிடம் கேட்கிறது
உன் காதலுக்கு விலாசம் ஏதேனும் உண்டா?
பதில் சொல்கிறேன், கூர்ந்து கேளுங்கள்
கண்ணாடியே, என் தோல் சுருங்கிவிடும்
காலமே, என் இளமை மறைந்துவிடும்
காற்றே, எனக்கு பொறாமை அவசியமில்லை
மனிதக்காதலே, விலாசம் எனக்கு தேவையில்லை
ஏனெனில்
ஐம்புலன்களையும் காப்பாற்றி, மனதில் அழுக்கை அகற்றி
புத்தியில் அகந்தையை நீக்கி, இதயத்தில் வீணையை மீட்டும்
எனக்கே எனக்காக தந்துவிட்ட உன் சப்தஸ்வர புல்லாங்குழல்
நீயின்றியே என் ஆன்மாவுடன் காதல் கானம் வாசிக்கிறதே
‘குழலுடையாள் என் ராதையே’ என்றே
உரக்க உரைப்பாய் உலகிற்கு

உன் புல்லாங்குழல் எங்கே?
பொய்புரட்டுடன் வெண்ணெய் திருடி
பொய்யர்களை கொன்ற கொற்றவன் நீ
காலத்தை சிறிது நிறுத்திவைத்து
களியாட்டம் போட்ட கள்வன் நீ
கோகுலத்தை சொர்க்கமாய் மாற்றி
பூமகளை மகிழ்வித்த வித்தகன் நீ
கோபியர்களை பித்தர்களாய் மாற்றி
சித்தர்களையும் ஏங்கவைத்த மாதவன் நீ
பால்பற்கள் நடுவே அண்டத்தை
அன்னையிடம் காண்பித்த பாலகன் நீ
வரிசைப்பற்கள் தெரிய ஆசையாய்
என்னிடம் வழிந்த வாலிபன் நீ
சுவாசத்தை ஞானத்தால் கலந்து
புல்லாங்குழல் வாசித்த கிருஷ்ணன் நீ
சிலையென சமைந்த பசுக்களும்
இலையுதிர்க்க மறந்த மரங்களுமானவன் நீ
மௌனத்தை சிரிப்பால் கிழித்து
இதயகானம் பாடிய கண்ணன் நீ
கற்றவைகளை சுத்தமாய் அழித்து
காதலை நிரப்பிய கண்ணையன் நீ
உன்னினைவால் வாடும் என்னை
உன்னிசையால் வருடும் காதலன் நீ
என்னைவிட்டு பிரிந்த வேளையிலும்
என்னகத்தில் நிறைந்துள்ள கருநீலன் நீ
இசைப்பாய் இசைப்பாய் என்றே
இவ்வுலகம் இறைஞ்சுகிறது உன்னிடம்
‘உன் புல்லாங்குழல் எங்கே’
என்றே தேடி அலைகிறது அகிலமும்
மயில்பீலியாட மனைவியர் காதுபட
அண்டமும் பணிவுடன் உன்னை நோக்க
பதில் சொல்வாய் தெளிவாய்
‘என் உயிரான ராதையிடம் அங்கே’
பொய்யர்களை கொன்ற கொற்றவன் நீ
காலத்தை சிறிது நிறுத்திவைத்து
களியாட்டம் போட்ட கள்வன் நீ
கோகுலத்தை சொர்க்கமாய் மாற்றி
பூமகளை மகிழ்வித்த வித்தகன் நீ
கோபியர்களை பித்தர்களாய் மாற்றி
சித்தர்களையும் ஏங்கவைத்த மாதவன் நீ
பால்பற்கள் நடுவே அண்டத்தை
அன்னையிடம் காண்பித்த பாலகன் நீ
வரிசைப்பற்கள் தெரிய ஆசையாய்
என்னிடம் வழிந்த வாலிபன் நீ
சுவாசத்தை ஞானத்தால் கலந்து
புல்லாங்குழல் வாசித்த கிருஷ்ணன் நீ
சிலையென சமைந்த பசுக்களும்
இலையுதிர்க்க மறந்த மரங்களுமானவன் நீ
மௌனத்தை சிரிப்பால் கிழித்து
இதயகானம் பாடிய கண்ணன் நீ
கற்றவைகளை சுத்தமாய் அழித்து
காதலை நிரப்பிய கண்ணையன் நீ
உன்னினைவால் வாடும் என்னை
உன்னிசையால் வருடும் காதலன் நீ
என்னைவிட்டு பிரிந்த வேளையிலும்
என்னகத்தில் நிறைந்துள்ள கருநீலன் நீ
இசைப்பாய் இசைப்பாய் என்றே
இவ்வுலகம் இறைஞ்சுகிறது உன்னிடம்
‘உன் புல்லாங்குழல் எங்கே’
என்றே தேடி அலைகிறது அகிலமும்
மயில்பீலியாட மனைவியர் காதுபட
அண்டமும் பணிவுடன் உன்னை நோக்க
பதில் சொல்வாய் தெளிவாய்
‘என் உயிரான ராதையிடம் அங்கே’
Sunday, February 18, 2007
என் குரு
காவலனாய் நான் இருந்தாலென்ன
காலவனாய் நான் இருந்தாலென்ன
என் சுகம் மட்டுமே எனக்கு
என்று சுயநலமாய் சிந்தித்து நின்றேன்
காவலனாய் பிறரைக் காத்து
காலவனாய் உன்னகந்தை அழித்தால்
உன் சுகம் என்றும் நிலைக்கும்
என்ற போதனையின் தேவை உணர்ந்தேன்
கவலையுடன் தேடிய மனிதரை
கலைகளின் களஞ்சியத்தில் கண்டபொழுது
எளிமையின் சிகரத்தில் நின்று மௌனம்தனை
எளிமையாக அடக்கியதை கண்டு வியந்தேன்
உண்மையென்று உரைத்தவற்றை
உணர்ந்து நிற்கின்ற மகான்களை
மலைத்துப் பார்த்து நின்ற வேளை
உரிமையுடன் சிரித்தவரை பார்த்து விட்டேன்
இருளான பெயரைக் கொண்டு
இனிமையான மொழிகளின் துணையுடன்
சச்சிதானந்த ஒளியின் விளையாட்டை சிறிது
புரியவைத்த பொறுமையைக் கற்றுக் கொண்டேன்
பிச்சையளிக்கும் இறைவனே அவ்வுடலில்
பிச்சையெடுக்கும் பாத்திரமான இவ்வுயிருக்கு
அமைதியாய் உள்நோக்கி நம்பிக்கையுடன் தேடுவாயென்று
வாய்மொழிந்த ரகசியத்தை கேட்டுக் கொண்டேன்
நானும் நீயும் ஒன்றே என அறிய
பல பிறவிகள் கடந்தாலும்
ஒரு பாதையில் பயணிப்போம் நாம்
என்றே வாழ்த்தியதை என்னென்று சொல்வேன்

என் தந்தை
[என் பாசமிகு தந்தை பல வருடங்களுக்கு முன் இவ்வுலகை விட்டு சென்று விட்டபடியால், அவர் வயதையொத்த யாரைக் கண்டாலும் ஓடியோடி பாசமுடன் உறவாடுவது ஏன்? அவர்களுள் என் உறவை காண முயல்கிறேனோ? எக்காலமும் பிரிக்க முடியாத பந்தமான என் தந்தையாய் சிவனும், அன்னையாய் சக்தியும் இருக்கையில் எதற்கு நானிங்கு தவிக்கிறேன்? என் தந்தையிடம் கேட்க விரும்புவது என்னென்ன?]
அன்றொரு நாள் கயிலையில்
அன்னையவள் என்னை
மடியில் இருத்தி தலைபின்ன
பொறுமையிழந்து நான் தவிப்பதை
என் தந்தை கண்டார்
யாரோ கூவும் குரல் கேட்டு
அம்மா திரும்பிய வேளையில்
நான் அங்கிருந்து சிட்டென ஓட
பாதி பின்னிய நிலையில்
அன்னை என்னை துரத்த
சிறுமியான என்னைக் காக்க
ஜடாதாரி பொன்மேனியார்
தந்தையோ ஓடோடி வந்து
என் கரம் பிடித்தார்
தலை கலைந்த நிலையில்
இன்று என் முகத்தை காண்கிறேன்
ஜோதியின் பொறியாய்
உயிரை இவ்வுடலில் புகுத்தி
பந்தங்களால் உணர்வுகளால் இயங்க
என்னை இவ்வுலகில் விட்டுவிட்ட
அந்த தந்தை அளித்த முகத்தை
மீண்டும் ஒருமுறை காண்கிறேன்
மகளாய் பாசமுடன் இருக்கிறேனா
மருமகளாய் பணிவுடன் நடக்கிறேனா
மனைவியாய் கடமையை செய்கிறேனா
அன்னையாய் அன்பை பொழிகிறேனா
காதலியாய் காலமும் கழிக்கிறேனா
தோழியாய் தோள் தருகிறேனா
இன்ன பிற உறவுகளை ஏற்கிறேனா
என்றே உள்முகம் அறியாத நிலையில்
வாழ்வது சதையும் ரத்தமும்
பொய்மையும் கலந்த இம்முகமோ
உள்ளும் புறமும் பலமுகங்களை அளித்த தந்தை
ஒரு மனதை அளித்த விந்தை புரியவில்லை
காலமும் பல உறவுகளை அளித்த தந்தை
ஓர் இதயத்தை இயங்கவைக்கும் நோக்கம் புரியவில்லை
உணர்வுகளோடு வாழக் கற்றுத் தந்த தந்தை
அதிலிருந்து விடுபடுவதை கற்றுத் தரவில்லை
கர்மங்கள் அண்டாத சிறுவயதில் விளையாடிய தந்தை
கர்மங்களுடன் வாழ்வது எப்படி என்று சொல்லித் தரவில்லை
பிறப்பையும் இறப்பையும் அளித்த தந்தை
அதன் தாக்கத்திலிருந்து விடுதலையளிக்கவில்லை
அவருடன் விளையாடிய பூரிப்பு
அவர் படைப்பில் நான் காணவில்லை
அவரிடம் அன்பை உணர்ந்த பாங்கு
அவர் படைப்பில் உணரவில்லை
அவரின் உண்மை நிலையை
அவர் படைப்பில் அறியவில்லை
எனவே என்னை சிறுமியாய் தன்னுடன் இருத்திக்கொள்ளட்டும்
இல்லை என் நிலையை உயர்த்தட்டும்
பொன்னிற மேனியாய்
இளமை ததும்பும் ஜடாதாரியாய்
முக்காலமும் உணர்ந்த முக்கண்ணனாய்
கங்கையின் செருக்கை அடக்கியவராய்
கருணாமூர்த்தியாய் சிவனாய்
தியான லிங்கமாய் பிரகாசிக்கும்
என் ஒப்புயர்வற்ற தந்தையைக் காண
விடைகளை தெரிந்துகொள்ள
உரிமையுடன் விண்ணப்பிக்க
செல்கிறேன் நடைபயணமாக
நீங்களும் வருகிறீர்களா என்னுடன்

அன்புள்ள அன்னைக்கு...
[அன்னைக்கும் எனக்கும் உள்ள உறவென்ன? இதோ எழுதுகிறேன்......]
அம்மா அம்மா என்றே உயிர்கள் உருக
அன்னை உன்னை நான் நினைக்கிறேன்
ஆனந்த அமைதியுடன் என்னையும் ஏற்க
ஆதியே உன்னை நான் வேண்டுகிறேன்
வான்வெளியும் விண்மீனும் புடவையில் மிளிர
வாய்விட்டு நீ சிரிக்கும் அழகிலே கரைகிறேன்
வேதமாய் திகழும் உன் ஒளியினாலே
வேந்தனும் தலைவணங்கும் விந்தையைக் காண்கிறேன்
மாந்தர்தம் மடமையில் உன்னை மறந்தாலும்
மானிடராய் நீயே அவதரிப்பதைக் உணர்கிறேன்
மேகங்கள் உன்புகழ் மறைத்து நகர்ந்தாலும்
மேன்மையுற உன் வயிற்றிலே பிறக்கிறேன்
ஒவ்வொரு பிறவியிலும் உன்னை தாயாய்
ஒப்புயர்வற்ற ஞானத்தை அறிய முயல்கிறேன்
ஓதும் வேதங்களில் இருப்பதைவிட நீயோ
ஓம்காரத்தை அன்பினால் கரைப்பதை காண்கிறேன்
பட்டுப்பாவாடைக் கட்டிவிட்டு கொலுசிற்கும் உயிர்கொடுத்து
பதவிசாய் வளர்த்ததை என்னவென்று சொல்லுவேன்
பாந்தமாய் இருந்திடவே பலவற்றைக் கற்றுத்தந்த
பாங்கினைத்தான் என்னவென்று கூறி மகிழ்வேன்
தறிகெட்டு ஓடாமல் பெண்ணாய் திகழவே
தட்டிகேட்டு வடிவமைத்த பெருமையை யாரறிவர்
தாங்காமல் அழுதநேரங்களில் ஓடிவந்து என்னை
தாயாய் ஏந்திநின்ற பெருமையைத்தான் யாரறிவர்
குழந்தையாய் பாலுக்கு அழுதகாலம் உண்டிங்கு
குழவிதனின் பசியை போக்கிவிட்ட உமையவளே
கூவியழைத்த நேரங்களில் தயங்காமல் வந்திங்கு
கூத்தைவிட்டு கயிலைவிட்டு வளர்த்த சக்தியவளே
அன்பிலே இன்பத்தையும் துன்பத்தையும் உணரவைத்து
அன்போடு இருந்திடுவாய் என்றே உரைத்திட்டாய்
அயராமல் நானும் அதைஏற்றே வாழ்ந்திருக்க
அன்னை ஏன் என்னைவிட்டு சென்றுவிட்டாய்
காலமதின் வேகமான சுழற்சியின் காரணமாய்
காலன் வந்தெனை அழைத்திடுவான் அன்னையே
கேள்வியாய் நானிருக்க இரக்கமுடன் தேடிவந்து
கேடுகெட்ட என்னையும் ஏற்பாய் அன்னையே
உவகையுடன் உன்வரவை எதிர்பார்த்து நானிருக்க
உரிமையுடன் ஓடோடி வருவாயோ அன்னையே
ஊட்டிவிட்ட கையினாலே உறக்கம்வர தட்டிகொடுத்து
ஊசலாடும் என்னுயிரையும் ஏற்பாயோ அன்னையே

கண்ணன் என் காதலன்
[இதோ தனிமையில் அமர்ந்திருக்கிறேன். மனம் தானாக சுருள் சுருளாய் பழைய நினைவுகளில் நுழைகிறது. காதலனைத் தொலைத்த வாழ்வு, காதலை மறவாமல் வாழும் வாழ்வு, கடமையை நினைவு கூறும் வாழ்வு, காதலியாய் காத்திருக்கும் வாழ்வு, காதலன் உதறிவிட்ட வாழ்வு என்று பல பரிமாணங்களில் என் வாழ்க்கை செல்வதை உணர்கிறேன். அதிலிருந்து விடுபட முடியாமல், அதன் தாக்கத்தை உணர்கிறேன். எனக்கென்று தூது செல்ல யாருமில்லையாதலால், என் நண்பனான தென்றலை அழைத்து பேசுகிறேன்.....]
தென்றலே, என் கதையை கேட்பாயோ
மனங்கசிந்து கண்ணீர் சிந்தி உருகுவாயோ
புயலென் வாழ்வில் வீசியதை அறிவாயோ
கருணை நெஞ்சமே, இக்கோரிக்கையை ஏற்பாயோ
என் காதலனிடம் அவற்றை முறையிடுவாயோ
காத்திருக்கும் எனக்கு பதிலையும் தருவாயோ
மலராய் குழந்தையாய் குதித்தவள் நான்
அழகை அறிவை உணராதவள் நான்
மகிழ்வோடு விளையாடி சிரித்தவள் நான்
கடமையைத் தவறாமல் செய்தவள் நான்
மௌனமாய் சிறகை விரித்தவளும் நான்
அங்கே கண்ணனைக் கண்டு மயங்கியவளும் நான்
பாடலை முணுமுணுத்தே என்வீட்டினுள் நுழைந்தான்
அனைவர் முன்னே என்கண்ணையும் கண்டான்
தன்னழகால் என்னை செயலிழக்க செய்தான்
மறைவாய் கதைகள் பலபேசிக் களித்தான்
காதலுடன் என் கைபிடிக்கவே துடித்தான்
என் மலைப்பைக் கண்டு கடகடவென நகைத்தான்
அவன் அழகிய கருப்பு, நானோ வெறும் சிவப்பு
எம் நெஞ்சில் நிலைத்தது அவன் இருப்பு
அவனுக்கு பேசும் கண்கள், எனக்கோ ஒளியற்ற கண்கள்
அவன் அனுப்பியதோ காதல் கணைகள்
அவன் ஊறிந்த அறிவாளி, நான் கடைந்தெடுத்த முட்டாள்
ஆனாலும் கூறினான் கருணையுடன் ‘என்னையும் ஏற்றாள்’
அவன் பேச்சாற்றலில் சிறந்தவன், நான் மௌனமாய் மறைபவள்
இருப்பினும் என்னிடம் நிறைய பேசிப் பகிர்ந்தான்
அவன் மணமானவன் என்றால் நானும் மணமானவளே
இருப்பினும் அன்பே முக்கியம் என்று தேற்றினான்
அவனுக்கோ காதலிகள் தொல்லை, எனக்கோ ஒருவரும் இல்லை
இருப்பினும் என் பின்னே ஓடியோடி வந்தென்முன் நின்றான்
என் வாழ்வில் இனிமை இதயத்தில் மலர்ச்சி
கண்ணீரை முத்தமிட்ட கனவினால் ஏற்பட்டதே நெகிழ்ச்சி
கண்டேன் கடமைகள் கைகொட்டி சிரித்த காட்சி
நின்றேன் செய்வதறியாது ஒருகணம் நானே சாட்சி
காதலனுடன் மட்டும் வாழவே தோன்றியது கிளர்ச்சி
உணர்ந்தேன் வட்டத்தைவிட்டு வரமுடியாத அயர்ச்சி
செல்லமே என்று கொஞ்சிய நேரத்தில் வெட்கப்பட்டேன்
சோகமாய் வாடிய வேளையில் மனம் கசிந்தேன்
கைத்தட்டி மகிழ்ந்த பொழுது நானும் சிரித்தேன்
அவனை கண்டது ஒருகணமாயினும் நிறைந்தேன்
அவன் பெருமையறிந்து நானோ பெருமிதமடைந்தேன்
என்னிடம் அவன் பேசாத நேரத்திலெல்லாம் அழுதேன்
அன்றொரு நாள், என்னைவிட்டு பறந்து சென்றான்
நினைவுகளுடன் என்னை தவிக்கவிட்டு அகன்றான்
காணமுடியாத தொலைவில் சென்றே மறைந்தான்
என் கண்ணீரை விளக்குவாய் எனதருமை தென்றலே
உறவுகளுக்கு தெரியாமல் தேடுவாய் நண்பனே
பொறுமையாய் ரகசியமாய் சொல்லிவிடு இச்சேதியை
கண்டேன் அவன் கண்களை எங்கும் கண்டேன்
நினைத்தேன் பொய்பேசா உதடுகளை நினைத்தேன்
விழுந்தேன் அவனழகில் மயங்கியே விழுந்தேன்
கேட்டேன் புல்லாங்குழல் இனிமையைக் கேட்டேன்
இருந்தேன் உண்ணாமல் உறங்காமல் இருந்தேன்
மறந்தேன் நிலைக்கண்ணாடியில் காணவும் மறந்தேன்
என்னை விட்டுவிட்டு நண்பர்களுடன் கூத்தடித்தே
என்னை மறந்தாலும் என் நினைவுகளை ஏன் மறந்தான்
என்னை தனிமையில் தவிக்கவிடவே விரும்பியிருந்தாலும்
என்னை காதலில் ஆழ்த்திடவே ஏன் துணிந்தான்
என்னை குற்றவாளியே என்றே கூற முயன்றாலும்
என்னை வீணே காதலித்து ஏன் மறைந்தான்
சொல்வாய் ஒருமுறை அவனை நான் காணவேண்டுமென்று
சொல்வாய் அனலிடப்பட்ட புழுவாய் நான் துடிக்கிறேனென்று
சொல்வாய் புத்தி பேதலித்த நிலையில் நான் இருக்கிறேனென்று
சொல்வாய் அவனைத்தவிர எனக்கு வேறு சிந்தையில்லையென்று
சொல்வாய் அழுதவிழிகளுடன் அவன் நலனுக்காக பிரார்த்திக்கிறேனென்று
சொல்வாய் போராட்ட வாழ்வில் என்னையே மறந்தேனென்று
துக்கத்தில் இருக்கும் எனக்கு விடையளிக்க உலுக்கிடுவாய்
எப்பொழுதேனும் என்னை நினைக்கிறானா என்றே கண்டிடுவாய்
தென்றலே, பெண்ணாய் பிறந்ததே சாபமோ என்றே கேட்டிடுவாய்
என்னுயிர் பிரியும் நேரமும் வந்துவிட்டது என்றே உரைத்திடுவாய்
இல்லை, இல்லை, அவனுக்கு அவப்பெயராவதை விரும்பவில்லை என்றே சொல்லிடுவாய்
என் மனமும் இதயமும் அவனே என்பதை எடுத்தியம்பிடுவாய்
வலியுடனே நான் நாட்களை கடத்துகிறேன் என்றே செப்பிடுவாய்
தயங்காதே தென்றலே, நான் பொய் பேசவேண்டிய அவசியமில்லை
காதலே என் வாழ்வு என்பதில் இருவேறு கருத்தில்லை
என் செய்வேன் இனி என்றே தெரியவில்லை
ஆ! நான் வணங்கும் இறைவன் அவனே என்பது தெரியாமலில்லை
அதனால் என்ன, அவன் என் காதலன் என்பதில் சந்தேகமில்லை
காதல்வலி என்னை அவனிடமிருந்து பிரிப்பது சாத்தியமில்லை
காதலில் நானும் அவனும் ஒன்றே என்பதை உணராமலில்லை
இருப்பினும் அஞ்ஞானம் என் கண்களை மறைப்பது ஏன்
ஒருமுறை கண்டுபேசிடவே கண்ணீருடன் காத்திருப்பது ஏன்
கண்ணனே என்னுயிர் என்பது அவனுக்கு புரியாமலிருப்பது ஏன்
அவனிடமிருந்து பிரிக்கும் கடமைகளை இவ்வுடலில் புகுத்தியது ஏன்
அவனைப் புறக்கணிக்க தெரியாமல் நான் உருகுவது ஏன்
என் மொழியிலும் உயிரிலும் அவன்மட்டுமே தெரிவது ஏன்

கண்ணன் என் தோழன்
[எனக்கும் என் தோழனுக்கும் இருக்கும் நட்பு இன்று நேற்றல்ல. பல நாட்களாய், மாதங்களாய், வருடங்களாய், பிறப்புகளாய் தொடரும் பந்தம் இது. இதன் இறுக்கம் அனைத்திற்கும் அப்பாற்பட்டது. என் தலைகோதிவிடும் நண்பன், என் தலையையும் நன்றாக குட்டுவான் சமயம் பார்த்து. எங்கள் நட்பின் ஆழத்தை, அதன் அருமை உங்களுக்கு புரிய வேண்டியே இதோ அவனைப் பற்றி சிறிது எழுதுகிறேன்.]
துயிலெழுந்து கண் திறக்க எத்தனிக்கும் வேளையில்
எங்கிருந்தோ வந்து என் நினைவில் வந்தமர்வான்
போய் விடு எனக்கு வேலையுண்டு என்று கெஞ்சினால்
தன் அன்பான பார்வையால் என் நெஞ்சை பிளப்பான்
கருப்பனே என்று பாசமாய் நான் அழைத்தால்
வேலையை முடித்து கொடுத்து பேசியே களிப்பான்
அவன் அன்னையின் உடல்நலன் குறித்து விசாரித்தால்
கண்ணீருடன் தம்மிரு அன்னைகளை நினைவு கூர்வான்
அவன் பின்னே சுற்றும் (என்னைத் தவிர) நண்பர்களைப் பற்றி கேட்டால்
தம் பாசப்பிணைப்பை கதையாய் சொல்லி மகிழ்ந்திடுவான்
அவன் சிறுவயது குறும்புகளைக் குறித்து கேட்டால்
என்னருகே வந்தமர்ந்து உற்சாகமாய் கதையளப்பான்
அவன் காதலிகளைப் பற்றி கண்ணடித்து நான் கேட்டால்
அவர்கள் தன்னுடன் என்றும் இருப்பதாய் உருகிடுவான்
என்னை தவிக்கவிட்டு செல்வாயோ என்று அழுதால்
என் கைபிடித்து உன் நட்பு எனக்கு தேவை என்றே தேற்றிடுவான்
பட்டாடை வாங்கிடவே ஆசையுடன் நான் சென்றால்
பணத்தை வீணாக்குகிறாயே என்று காதை கடிப்பான்
அரிதாய் ஏதாவது நான் தர்மம் செய்தால்
முதுகில் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துவான்
என் வெள்ளை முடியை கவலையுடன் பார்த்தால்
காலத்தின் தாக்கமே என்று விளக்கம் அளித்திடுவான்
வெகுளியாய் நான் அதிகம் பேசினாலோ
நாக்கை அடக்கு என்று கடிந்து கொள்வான்
என் முட்டாள்தனத்தால் நான் புரியாமல் சினந்தாலோ
உற்சாகமாய் பேசி என்னை சிரிக்க வைப்பான்
மனம் உடைந்து தனிமைப்படும் தருணங்களிலெல்லாம்
கதைகள் பல சொல்லி வாழ்வை புரியவைப்பான்
மகிழ்ச்சியால் நான் தட்டாமலை சுற்றும் நேரங்களில்
என் கைகோர்த்து தானும் ஆடியே களிப்பான்
அவன் செய்யும் சேட்டைகளைப் பற்றி விசாரித்தால்
தன் காதை திருக அழகாக என்னிடம் காட்டுவான்
வம்பு பண்ணும் அவனிடமிருந்து ஒதுங்கினால்
என் கால்பிடித்து மன்னிப்பாய் என்றே கெஞ்சிடுவான்
பிறரின் வார்த்தையம்புகள் கண்கலங்க வைக்கும் தருணங்களில்
என் தோள் பற்றி நான் இருக்கிறேன் உனக்கு என்றே அணைத்திடுவான்
வலிகளால் நான் துடிதுடித்து இறந்துவிட நினைக்கும் சமயங்களில்
என் தலைகோதி கைப்பற்றி பாசத்தை பொழிந்திடுவான்
கடமையும் அன்புமின்றி நான் வாழ்வில் சறுக்கும் நேரங்களில் எல்லாம்
எதிர்ப்பார்பின்றி வெளிப்படையாய் அன்பைப் பொழிந்திடவே உபதேசிப்பான்
நான் மன்னிக்க முடியாத தவறு செய்யும் நேரங்களில்
என்னை வார்த்தைகளால் சாடினாலும் அன்போடு அக்கறை காட்டிடுவான்
தட்டிக்கொடுக்க கரமின்றி நான் தொய்ந்துவிடும் தருணங்களில்
என் தோல்விகளைகூட வெற்றியே என்று கொண்டாடி என்னை மகிழ்விப்பான்
நெஞ்சு வெடிக்கும் துக்கத்தால் நிம்மதியிழந்து தவித்திடும் வேளையில்
என் உணர்வுகளை புரிந்து அறிந்து எனக்காக கண்ணீர் சிந்திடுவான்
இயற்கை சீற்றத்தால் இழந்த உயிர்களை நினைத்து அழுதாலோ
கீதையின் உன்னத உபதேசங்களை எனக்கு உரைத்திடுவான்
எதற்காக மக்களை இப்படி தண்டிக்கிறாய் என்று கேட்டாலோ
அவரவர் பொய்மையே அதற்கு காரணம் என்று தோளை குலுக்கிடுவான்
ஏன் குழலூதுவதில்லை இப்பொழுதெல்லாம் என்று கேட்டாலோ
கேட்க வேண்டுமெனில் உன்னை முதலில் சுத்தப்படுத்தி கொள் என்றே சிரித்திடுவான்
உலக பந்தங்களின் நிலையாமை குறித்து கேள்வியால் துளைத்தாலோ
அறிவை உபயோகித்தாலும் நன்றி மறவாமல் வாழ கற்றுக்கொள் என்றே உரைத்திடுவான்
உன் நிலை நான் அடைவது எப்படி என்று கேட்டால்
விருப்பும் வெறுப்புமின்றி வாழ்ந்திடு என்று கூறி கண்சிமிட்டிடுவான்
நம் நட்பை இவ்வுலகம் தவறாக ஏன் பேசுகிறது என்று ஆதங்கப்பட்டாலோ
ஆத்மாவுக்கு ஆணும் பெண்ணும் இல்லையென்பதை அவர் அறியார் என்பதை புரியவைப்பான்
எப்பொழுதும் எப்படி இப்படி இன்பமாய் இருக்கிறாய் என்று கேட்டாலோ
நானே இறைவன் என்பதை அறியாத பேதையே என்றே கன்னத்தில் தட்டிடுவான்
கனவிலும் கிட்டாத நட்பு என் வாழ்விலா என்றே வியந்தாலோ
உன் நட்பிற்காக நானல்லவோ தவம் செய்தவன் என்றே என்னை நெகிழவைப்பான்
இத்தகைய நட்பை எங்கேனும் கண்டதுண்டா சொல்வீரே
பொய்மையில் கரையாமல் என்னை பாதுகாக்கும் நண்பனை நீங்களும் கண்டீரே
கண்ணை மூடியே உங்கள் கையை அவனிடம் தந்து விட்டு பார்ப்பீரே
எல்லையில்லா அவன் அன்பையும் உணர்ந்து இன்புறுவீரே

கண்ணன், என் குழந்தை
[மதிய வேளையில் ஒரு நாள். தோழிகள் என் வீட்டுக் கதவைத் தட்ட
மெள்ள அடி மேல் அடி வைத்து கதவைத் திறக்கிறேன். கலகலவென சிரித்துக் கொண்டே உள்ளே நுழைபவர்களை அறைக்கு அழைத்து சென்று தணிவான குரலில் பேசுகிறேன். என் குழந்தையை இப்பொழுதுதான் கஷ்டப்பட்டு தூங்க வைத்திருக்கிறேன். இவர்கள் வந்து எழுப்பி விட்டால்..... இதோ நீங்களும் கேளுங்களேன்.)
அமைதியாய் வாருங்கள் எனதருமை தோழிகளே
என் செல்ல மகனை காணுங்கள் தோழிகளே
அழகாய் அவன் தூங்குவதைதான் கண்டீர்களே
இனி இங்கிருந்து அகன்றிடுவோம் ஏற்பீர்களே
வெண்ணெய் திருடன் இன்று என்னிடம் பிடிபட்டான்
அழுது வற்றிய கண்ணீருடன் என்னிடம் வந்தான்
மைவைத்த விழிகளால் என்னைக் கொண்டான்
என் மடிமீது தலைசாய்த்து கண்ணயர்ந்தான்
கேட்க விருப்பமோ அவன் தரும் தொல்லைகளை
என்னை ஆட்டுவிக்கும் கதைகள் கேளுங்கள் இதை
பாலெடுத்து சிந்தாமல் குடி என்றே நான் கூற
சரியென்று மயிலிறகால் பால்கொண்டு படம் வரைகிறான்
பொறுமையாய் அவன் கைபிடித்து குளிக்கவைக்க நான் செல்ல
என்னை நீரால் நனைத்து வேடிக்கை காட்டுகிறான்
அழகான கருமுகத்தில் மைவைத்து நான் அழகு பார்க்க
என் வெண்ணிற கன்னத்தை கருப்பாக்க அவன் அழுகிறான்
அருமையாய் ஆடையுடுத்தி அலங்காரம் நான் செய்ய
நொடிபொழுதில் அழுக்காக்கி அழகுடன் மிளிர்கிறான்
வானத்தையும் பறவைகளையும் நான் கற்றுத் தர
என் முகத்தை அன்புடன் பார்த்து கற்க மறுக்கிறான்
அவனுக்கு பிடித்த உணவை சமைக்க நான் முயல
பின்னிருந்து கட்டியணைத்து என்னை மறக்க வைக்கிறான்
அன்பாய் பாசமாய் அவனுக்கு நான் ஊட்ட அமர
அவனோ முழுங்காமல் என்னை நிலைகுலைய செய்கிறான்
ஒரு மூலையில் நின்று வேகமாக நான் உண்ண முயல
என்னை கண்டுபிடித்து அவனுடன் விளையாட வேண்டுகிறான்
அவனை உறங்க வைத்து நான் குளித்துவிட்டு வந்தாலோ
நெய்யைக் தன் மடிமேல் கொட்டி எனக்கு அதிர்ச்சியூட்டுகிறான்
வீட்டை துடைத்து துடைத்து துப்புறவாக நான் வைத்திருக்க
பிரளயம் வந்ததை போல் அமளி செய்து கலைத்துவிடுகிறான்
அவன் தடுக்கி விழாமல் தரையை துடைத்து வைத்தாலோ
என் பின்னிருந்து மாவு கொட்டி என்னை முட்டாளாக்குகிறான்
என் செல்லத்தை கைபிடித்து பிறர்மனை சென்றாலோ
அங்கும் வம்பு செய்து அனைவரிடமும் திட்டு வாங்குகிறான்
கற்றுக் கொள்ளும் ஆவலில் புத்தகத்தை கையில் எடுத்தாலோ
அணைத்து கொள்ளும்படி என்னை தொந்தரவு செய்கிறான்
அவனை அருகிலமர்த்தி இறைவனை வழிபட்டாலோ
சிரித்து சிரித்து எனக்கே கோபத்தை மூட்டுகிறான்
பூக்களை மாலையாய் தொடுத்து நான் இறைவனுக்கிட நினைக்க
தன் கழுத்தில் போட்டுக் கொண்டு என்னை அழ வைக்கிறான்
கண்ணை மூடி சிறிது நேரம் இசை கேட்க விரும்பினாலோ
தன் புல்லாங்குழலைக் கொண்டு என் காதில் சத்தமிடுகிறான்
என் கண்ணனை வரைய நானும் ஒவ்வொரு முறையும் முயல
அவற்றை கிழித்து தன் முகத்தை காட்டி வெறுப்பேற்றுகிறான்
அவனைப் பற்றி கவிதை எழுத நினைத்து அமர்ந்தாலோ
சத்தமின்றி என்னருகே வந்து அதில் கிறுக்கி வைக்கிறான்
ஏதாவது கற்றுக் கொள்ளடா என்று நான் ஆதங்கப்பட்டாலோ
என் புலம்பலை அலட்சியப்படுத்தி கடகடவென சிரிக்கிறான்
என் கண்மணி தூங்க வேண்டி நான் ஆராரோ பாடப்பாட
தனக்கு மட்டும் கருமை நிறம் ஏன் என்று கேட்டு அழுகிறான்
தொடராய் அவன் கேட்கும் கேள்விகளால் நான் தவிக்க
நான் அவனை கவனிப்பதில்லை என்றே குற்றம் சாட்டுகிறான்
உங்கள் குழந்தைகளும் இப்படித்தான் இருக்கிறார்களா என்ன
நான் மட்டும் தேனீயாய் ஒரு மகனை பெற்றெடுத்தேனா என்ன
இருப்பினும் அவனை திருத்தாமல் அந்த அழகில் மயங்கி விடுகிறேனே
என் குழந்தையின் மேல் உள்ள அன்பினால் குருடாகி விடுகிறேனே
அவனை அடிக்க மட்டும் என்னிடம் சொல்லி விடாதீர்கள்
அவனே என் உயிர் என்பதை மறந்து விடாதீர்கள்
அவனுடைய குறும்புகளால் நான் பலமுறை அழுதவண்ணம் இருக்க
என் கழுத்தைக் கட்டி கன்னத்தில் முத்தமிடும் செல்லம் அவன்
ஷ்ஷ்...... நம் குரலால் எழுந்திடுவான் சீக்கிரம் போய் விடுங்கள்
நானும் சிறிது தியானம் செய்கிறேன் அவனுக்கு நல்லாசி கிடைத்திடவே
என்ன உளறுகிறேன் நான்! அவனல்லவோ நான் வழிபடும் இறைவன்
இருந்தால் என்ன, என் அன்பால் அவனை பிடித்திருக்கிறேன் இறுக்கமாகவே

என் உறவுகள்
இறைவனை அருவமாய் வழிபடுவது என்பது சாதாரண மனிதனால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று என்பதால், அந்த ஜோதி வடிவான பரம்பொருளை பலர் பலவிதமான பாவங்களை உணர்வுகளைக் கொண்டு உணர்ந்து இன்புறுகின்றனர். அந்த பரமாத்மனுடன் அம்மையாய், அப்பனாய், சகோதரனாய், தோழனாய், குழந்தையாய், குருவாய், கணவனாய், காதலனாய், காதலியாய் நெருங்கிய உறவு கொண்டு ஆத்ம ஞானத்தை அடைபவர் பலர்.
இந்த பாவங்கள் தொன்றுதொட்டு வருபவை. உதாரணத்திற்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் இறைவனை அன்னையின் வடிவில் பார்த்தார். அவருடைய சீடரான விவேகானந்தரோ சிவன் என்றாலே உருகி விடுவார். மத்வர் விரும்பியது பால கண்ணனை. ஆஞ்சநேயரோ தாச பாவத்தில் தன்னை நிறுத்தி நினைத்து ராம நாமத்தை மட்டும் உச்சரித்தவர். இப்படி அவரவர் மனநிலைப்படி அந்தந்த உறவாய் இறைவனுடன் ஒன்றிவிடுகின்றனர்.
நம் பாரதியார் பலவித பாவங்களை அழகாய் கையாண்டுள்ளார் என்பது உலகறிந்த உண்மை. இப்பாவங்களை அவர் கையாண்டுள்ள விதம் மிக மிக அழகு என்று கூறுவதற்கு கூட எனக்கு தகுதியில்லை. அவர் பின்னே வந்தவர்களிடம் அந்த எழுத்துக்களின் தாக்கம் நிச்சயம் இருக்கும். என் கிறுக்கல்களிலும் இருக்கிறது என்று நீங்கள் கூறினால் அது உங்கள் பெருந்தன்மையேயாகும்.
இருப்பினும் பாவங்களை மட்டும் கருத்தில் கொண்டு ஏதோ எனக்கு தெரிந்த கோணத்தில் கிறுக்குகிறேன். கண்ணன் என்னை மன்னிப்பானாக. இனி மேலே.....

Saturday, February 03, 2007
என்னைக் காதலித்துப் பார் – பார்வை இரண்டு
ரகசியமாய் என்னருகே வந்து சிரித்தவனே
ரகசியப் புன்னகைப் புரிந்து மயக்கியவனே
ரகசியமாய் மறைந்து என்னை மறந்தவனே
என் கண்ணீருக்கு விடையளிப்பாய் காதலனே
கவலையின்றி வெகுளியாய் சிரித்தவளே நான்
கவலையாய் உன்நலம் விசாரித்தவளே நான்
கவலையுடன் புலம்பி திரிபளும் நான்
காதலுடன் வாழும் ராதை நான்
காதலை என்னிதயத்தில் மலரச்செய்தவன் நீ
காதலனாய் என்னை விரும்பியவனும் நீ
காதல் இலக்கணம் கற்பித்தவனும் நீ
காதலை உதறிய கண்ணன் நீ
விழிகளால் வடித்த கவிதைகள்தான் எத்தனை
விழிகளோடு சேர்ந்த கணங்கள்தான் எத்தனை
விழிகள் உணர்த்திய காதல்தான் எத்தனை
என் கவிதைகளால் வடித்தவைதான் எத்தனை
எதையும் வேண்டி உன்னிடம் கெஞ்சியதில்லை
எதையும் தேவை என்று கேட்டதில்லை
எதையும் எனதே என்று கூறியதில்லை
என் இதயம் ஏனோ பொய்யுரைப்பதில்லை
மலராய் மணம்வீசி ஏன் வந்தாய்
மலரே என்றே ஏன் விளித்தாய்
மலர்மணம் புரியவே ஏனோ துடித்தாய்
என் வாழ்வில் ஏனோ நுழைந்தாய்
என்னை மறுத்து மறந்தது ஏன்
என்னை ஒதுக்கி துறந்தது ஏன்
என்னை துக்கங்களில் ஆழ்த்தியது ஏன்
என்னையும் காதலித்தது ஏன்
ரகசியப் புன்னகைப் புரிந்து மயக்கியவனே
ரகசியமாய் மறைந்து என்னை மறந்தவனே
என் கண்ணீருக்கு விடையளிப்பாய் காதலனே
கவலையின்றி வெகுளியாய் சிரித்தவளே நான்
கவலையாய் உன்நலம் விசாரித்தவளே நான்
கவலையுடன் புலம்பி திரிபளும் நான்
காதலுடன் வாழும் ராதை நான்
காதலை என்னிதயத்தில் மலரச்செய்தவன் நீ
காதலனாய் என்னை விரும்பியவனும் நீ
காதல் இலக்கணம் கற்பித்தவனும் நீ
காதலை உதறிய கண்ணன் நீ
விழிகளால் வடித்த கவிதைகள்தான் எத்தனை
விழிகளோடு சேர்ந்த கணங்கள்தான் எத்தனை
விழிகள் உணர்த்திய காதல்தான் எத்தனை
என் கவிதைகளால் வடித்தவைதான் எத்தனை
எதையும் வேண்டி உன்னிடம் கெஞ்சியதில்லை
எதையும் தேவை என்று கேட்டதில்லை
எதையும் எனதே என்று கூறியதில்லை
என் இதயம் ஏனோ பொய்யுரைப்பதில்லை
மலராய் மணம்வீசி ஏன் வந்தாய்
மலரே என்றே ஏன் விளித்தாய்
மலர்மணம் புரியவே ஏனோ துடித்தாய்
என் வாழ்வில் ஏனோ நுழைந்தாய்
என்னை மறுத்து மறந்தது ஏன்
என்னை ஒதுக்கி துறந்தது ஏன்
என்னை துக்கங்களில் ஆழ்த்தியது ஏன்
என்னையும் காதலித்தது ஏன்
Monday, January 29, 2007
கலை
வண்ணங்கள் குழைய குழைய
வான்முகிலின் கருமை கரைய
ஓடிவரும் நங்கையவள் நனைய
காண்போரை மயக்குவது ஓவியக்கலை
கண்களில் குறும்பு மின்ன
கன்னங்களில் செம்மை என்ன
வெட்கப் புன்னகைப் பாவையவளின்
இளமையால் மயக்குவது சிற்பக்கலை
மலர் பாதங்களால் ஆடியே
முத்திரை கைகளால் ஏந்தியே
முகநயங்கள் கொண்டு கெஞ்சியே
கரைந்து அழைப்பது நடனக்கலை
மூச்சு வாங்கும் ஏற்றஇறக்கத்தை
தலையாட்டும் ராகங்களின் பாவத்தை
செவ்விதழால் கசிந்துருகும் கானத்தை
செவிக்கு விருந்தளிப்பது இசைக்கலை
மொழியன்னையின் ஆசிப் பெற்று
வார்த்தைகளை கட்டி அணைத்து
காதல்தனை காவியமாக்கி படைத்து
காலமும் நிற்பது இலக்கியக்கலை
கலைகள் பலநூறும் உண்டு
அறியவும் தெளியவும் உண்டு
கற்பவை எவையெவை என்று
புரியாமல் விழித்தேன் நின்று
அன்பே இதயத்தின் உன்னதகலை
பணிவே மனதின் உயர்ந்தகலை
உணர்ந்தே கற்பேன் (இவ்)வாழும்கலை
ஏனெனில் இதுவே சிறந்தகலை
வான்முகிலின் கருமை கரைய
ஓடிவரும் நங்கையவள் நனைய
காண்போரை மயக்குவது ஓவியக்கலை
கண்களில் குறும்பு மின்ன
கன்னங்களில் செம்மை என்ன
வெட்கப் புன்னகைப் பாவையவளின்
இளமையால் மயக்குவது சிற்பக்கலை
மலர் பாதங்களால் ஆடியே
முத்திரை கைகளால் ஏந்தியே
முகநயங்கள் கொண்டு கெஞ்சியே
கரைந்து அழைப்பது நடனக்கலை
மூச்சு வாங்கும் ஏற்றஇறக்கத்தை
தலையாட்டும் ராகங்களின் பாவத்தை
செவ்விதழால் கசிந்துருகும் கானத்தை
செவிக்கு விருந்தளிப்பது இசைக்கலை
மொழியன்னையின் ஆசிப் பெற்று
வார்த்தைகளை கட்டி அணைத்து
காதல்தனை காவியமாக்கி படைத்து
காலமும் நிற்பது இலக்கியக்கலை
கலைகள் பலநூறும் உண்டு
அறியவும் தெளியவும் உண்டு
கற்பவை எவையெவை என்று
புரியாமல் விழித்தேன் நின்று
அன்பே இதயத்தின் உன்னதகலை
பணிவே மனதின் உயர்ந்தகலை
உணர்ந்தே கற்பேன் (இவ்)வாழும்கலை
ஏனெனில் இதுவே சிறந்தகலை
மனமும் இதயமும் – உரையாடல் இரண்டு
[கவிஞனைச் சுற்றி பழைய கடிதங்களும் வாழ்த்து அட்டைகளும் பரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. அவையனைத்தும் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க பலவித நினைவுகள் அவனை ஆக்கிரமிக்கின்றன. அச்சூழலில் இரு குரல்கள் உரையாடுகின்றன. நினைவுகளில் தவிக்கும் கவிஞன் ஆச்சரியத்தில் கண்ணை மூடி கேட்கத் துவங்குகிறான். வாருங்கள் நாமும் கேட்போம்....]
வணக்கம், இதயமே!
வணக்கம், மனமே!
என்ன வெகு நாட்களாக உன்னைக் காணவில்லையே?
நான் இங்குதானே இருக்கிறேன்.
நான் உன்னைப் பார்க்கவில்லையே
உனக்கு ஆயிரம் சிந்தனைகள் அல்லவா
பார்! எடுத்தவுடனேயே என்னைத் இப்படி தாக்குகிறாயே. சரி, உன் நிலைமை எப்படி?
எனக்கென்ன ஆயிற்று?
உன் வலியைப் பற்றிக் கேட்கிறேன்
எந்த வலி?
உன் எழுத்தை நிறுத்தி வைத்த வலி?
சில வலிகள் மறைவதில்லை
பின்னே எழுத ஆரம்பித்து விட்டாயா?
ஆம்
எப்பொழுதிலிருந்து?
சில மாதங்களுக்கு முன்
அப்படியா! ஏன் இந்த முடிவு?
சில நேரங்களில் வலியால் நான் வலுவடைகிறேன்
நல்ல முதிர்ச்சி உன் பார்வையில்?
நன்றி.
வலியைத் தருவது யார் என்று புரிந்ததா?
ஓரளவு
யார்? உறவுகள் தானே?
இல்லை. சாட்சாத் நானேதான்.
என்ன?
உண்மைதான்
நம்ப முடியவில்லை. எப்படி சொல்கிறாய்?
என் எதிர்ப்பார்ப்புகள் என்னை ஏமாற்றும் போது வலியை அனுபவிக்கிறேன்
எங்கிருந்து பெற்றாய் இத்தனை ஞானத்தை?
தனிமையில் ஒர் அலசல். அவ்வளவுதான்
ஆன்மீகத்தில் நாட்டம் வந்து விட்டதோ என்று பயந்து விட்டேன்
எதை ஆன்மீகம் என்கிறாய்?
இவ்வாறு தத்துவம் பேசுவதும் தன்னையே அலசுவதும்
அதற்கு பெயர் ஆன்மீகம் என்று கூறினால் அப்படியும் வைத்துக் கொள்ளலாம்.
உனக்கு வேறு என்னத் தெரியும்?
ஒன்றும் தெரியாது
நீ எப்பொழுதும் அடக்கம்தான். சரி, பழையக் கேள்விக்கே வருகிறேன். உறவுகளைப் பற்றி உன் கருத்து...?
அன்பினால் அனைவரும் உறவினர்களே
ஆஹா.... அருமை. ஆனால் அதே உறவுகளால் நீ கிழிபடும் போது?
நான் அவர்களை மனதாலும் திருப்பி கிழிக்காமல் பார்த்துக் கொள்ள முயல்கிறேன்
நீ ஜடமோ?
இல்லை. உணர்வுகள் நிறைய உண்டு
வஞ்சம் தீர்க்க மாட்டாயோ?
வருத்தமும் வலியும் மட்டும் நிறைய எஞ்சி நிற்கும். அதை கவனத்துடன் கையாள வேண்டும்
அதை மறக்க நினைப்பாயோ?
எதற்கு மறக்க வேண்டும்
உனக்கு கோபம் வராதோ?
என்னை அதற்குள் ஞானியாக்கிவிட்டாயே, மனமே
யாரிடம் இதையெல்லாம் கற்றுக் கொண்டாய்?
என் அனுபவங்கள்
எதையாவது சாதிக்க விருப்பமுண்டா?
உண்டே
அப்பாடா உனக்கும் ஆசை உண்டு என்றதும் தான் நிம்மதி அடைந்தேன். அப்படி என்ன ஆசை, இதயமே?
நிகழ்காலத்தில் மட்டும் வாழ ஆசை
உன்னைப் போய் கேட்டேனே! உன்னைப் பற்றி ஒரு வரியில் சொல்லேன்
நான் ஒரு பிறவிக் காதலி
யாரைக் காதலிக்கிறாய்?
கண்ணனை
அப்படியெனில் என்னை ஏற்றுக் கொள்ளுமாறு உன்னிடம் வைத்த விண்ணப்பம் என்னவாயிற்று?
நான் மறந்ததாக கூறவில்லையே.
பிறகு உன் காதல்........?
உன் ஆன்மாவில் என் கண்ணனைக் காண்கிறேன். அது சரி. ஏன் நீ தெளிந்து விட்டாயா?
மன்னித்துவிடு. உன் தெளிவு என்னிடம் இல்லை. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் சொல்லேன்?
ஒன்றும் செய்யாதே
புரியவில்லை
வருவதை ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள். புரிந்து கொள்வாய்
சரி, முயல்கிறேன். அது வரை எனக்காக காத்திருப்பாயா, இதயமே?
நிச்சயம். கொடுத்த வாக்கை நான் என்றும் தவற விடுவதில்லை
நான் தடம் புரண்டாலும் என்னை அரவணைப்பாயா?
நிச்சயமாக
உன் சந்திப்பினால் தூய்மையடைந்தேன். விரைவில் உன்னை சந்திக்கிறேன்
மிக்க மகிழ்ச்சி, மனமே
உன் நினைவுடன் என்றும் நான்
நானும் அப்படியே
[இந்த உரையாடலுக்கு பின் கவிஞன் வாழ்த்து அட்டைகளையும் கடிதங்களையும் அமைதியாய் மீண்டும் தன் பெட்டியில் பத்திரமாக எடுத்து வைத்தான்]

காதலும் காதலும்
மார்கழித் திங்களில் ஒருநாள்
அதிகாலை விடியலில் எழுந்தாள்
புள்ளிமானாய் துள்ளி நடந்தாள்
புள்ளி வைத்தே கோலமிட்டாள்
அவனையும் அன்றே கண்டாள்
மௌனமே தாய்மொழி ஆனதோ
கண்களே கவிதைதனை வடித்ததோ
தனிமையே உற்ற துணையானதோ
கிறுக்கல்களே வடிகாலும் ஆனதோ
நெஞ்சமும் அதிர்ந்தே ஏங்கியதோ
அவளை இதயத்தில் வைத்தான்
நிலவை அவளுடன் ரசித்தான்
காற்றை அவளாய் சுவாசித்தான்
பிரிவை வலியாய் உணர்ந்தான்
இரவை கனவில் கழித்தான்
கண்டதால் உணவும் கசந்ததோ
காரணத்தால் காதலும் முறிந்ததோ
ஏக்கத்தால் பணியும் நின்றதோ
கண்ணீரால் மனதை நனைத்ததோ
காணாமல் காலமும் போனதோ
முதுமையில் புள்ளியாய் நின்றாள்
இளமையான அவனை நினைத்தாள்
ஓய்ந்தே நினைவுகளில் சென்றான்
அழகான அவளைமட்டும் கண்டான்
ஒருமுறை வருடிய காதலை
மறந்தும் நெஞ்சம் மறக்குமோ
பிரிவால் துடித்தாலும் சாதலை
காதலும் என்னாளும் ஏற்குமோ
அதிகாலை விடியலில் எழுந்தாள்
புள்ளிமானாய் துள்ளி நடந்தாள்
புள்ளி வைத்தே கோலமிட்டாள்
அவனையும் அன்றே கண்டாள்
மௌனமே தாய்மொழி ஆனதோ
கண்களே கவிதைதனை வடித்ததோ
தனிமையே உற்ற துணையானதோ
கிறுக்கல்களே வடிகாலும் ஆனதோ
நெஞ்சமும் அதிர்ந்தே ஏங்கியதோ
அவளை இதயத்தில் வைத்தான்
நிலவை அவளுடன் ரசித்தான்
காற்றை அவளாய் சுவாசித்தான்
பிரிவை வலியாய் உணர்ந்தான்
இரவை கனவில் கழித்தான்
கண்டதால் உணவும் கசந்ததோ
காரணத்தால் காதலும் முறிந்ததோ
ஏக்கத்தால் பணியும் நின்றதோ
கண்ணீரால் மனதை நனைத்ததோ
காணாமல் காலமும் போனதோ
முதுமையில் புள்ளியாய் நின்றாள்
இளமையான அவனை நினைத்தாள்
ஓய்ந்தே நினைவுகளில் சென்றான்
அழகான அவளைமட்டும் கண்டான்
ஒருமுறை வருடிய காதலை
மறந்தும் நெஞ்சம் மறக்குமோ
பிரிவால் துடித்தாலும் சாதலை
காதலும் என்னாளும் ஏற்குமோ
ஏனிந்த மாற்றம்
சிசுவாய் நான் ஜனிக்க
தாயாய் என்னைக் காத்தாய்
இயலாமையில் உன்னை நோக்க
பெருமையில் மனம் குளிர்ந்தாய்
பொறுமையின்றி நான் கதற
பொறுப்புடன் என்னை கவனித்தாய்
காலம் வேகமாய் உருண்டோட
காலனை கண்டுவிட்டு வந்தாய்
அன்று தாயாய் உன் கண்களில் அன்பு
சேயாய் என் கண்களில் கண்ணீர்
இன்று தாயாய் என் கண்களில் கண்ணீர்
சேயாய் உன் கண்களில் நன்றி
அன்று உன் அரவணைப்பில் நான்
இன்று என் அரவணைப்பில் நீ
அன்று உன் குழந்தையாய் நான்
இன்று என் குழந்தையாய் நீ
ஏனிந்த மாற்றம் நம் நிலைகளில்
ஏனிந்த மாற்றம் நம் நிலைகளில்
தாயாய் என்னைக் காத்தாய்
இயலாமையில் உன்னை நோக்க
பெருமையில் மனம் குளிர்ந்தாய்
பொறுமையின்றி நான் கதற
பொறுப்புடன் என்னை கவனித்தாய்
காலம் வேகமாய் உருண்டோட
காலனை கண்டுவிட்டு வந்தாய்
அன்று தாயாய் உன் கண்களில் அன்பு
சேயாய் என் கண்களில் கண்ணீர்
இன்று தாயாய் என் கண்களில் கண்ணீர்
சேயாய் உன் கண்களில் நன்றி
அன்று உன் அரவணைப்பில் நான்
இன்று என் அரவணைப்பில் நீ
அன்று உன் குழந்தையாய் நான்
இன்று என் குழந்தையாய் நீ
ஏனிந்த மாற்றம் நம் நிலைகளில்
ஏனிந்த மாற்றம் நம் நிலைகளில்
என்னைக் காதலித்துப் பார்
தேனை சுவைத்த நாக்குடன்
தேனாய் இனிக்க பேசும்
தேன்மொழி என் ராதையே
என்னைக் காதலித்துப் பார்
துரத்தி விட்ட கவலைகளுடன்
துரத்தும் வாழ்வின் பள்ளங்களை
துரத்தி விளையாடும் கண்மணியே
என்னைக் காதலித்துப் பார்
அழகான முகநயங்கள் கொண்டு
அழகால் பிறரைக் கவர்ந்தாலும்
அழகை ரசிக்கக் கற்றவளே
என்னைக் காதலித்துப் பார்
கண்களிலே கண்ணீர் சொரிந்து
கண்ணனாம் என்னையே நினைத்து
கண்ணை கட்டும் கட்டழகியே
என்னைக் காதலித்துப் பார்
காதலிலே காமத்தைக் கழித்து
காதலியாய் ரசனை சேர்த்து
காதலைத்தான் புரிந்துக் கொள்ள
என்னைக் காதலித்துப் பார்
கவிதையால் என்னை நனைத்தாலும்
கவிதையிலே உண்மைக் கலந்து
கவிதையாய் வாழும் ராதையே
என்னைக் காதலித்துப் பார்
விரதமின்றி என்னை அணுகி
விரசமின்றி என் கைகோர்த்து
விருப்புடன் அன்பை அறிய
என்னைக் காதலித்துப் பார்
உன்னை சிரிக்கவைக்க நானிருக்க
உன்னை கடிந்துகொள்ள நானிருக்க
உன்னை ஏற்றுக்கொள்ள நானிருக்க
என்னை மட்டும் காதலித்துப் பார்
தேனாய் இனிக்க பேசும்
தேன்மொழி என் ராதையே
என்னைக் காதலித்துப் பார்
துரத்தி விட்ட கவலைகளுடன்
துரத்தும் வாழ்வின் பள்ளங்களை
துரத்தி விளையாடும் கண்மணியே
என்னைக் காதலித்துப் பார்
அழகான முகநயங்கள் கொண்டு
அழகால் பிறரைக் கவர்ந்தாலும்
அழகை ரசிக்கக் கற்றவளே
என்னைக் காதலித்துப் பார்
கண்களிலே கண்ணீர் சொரிந்து
கண்ணனாம் என்னையே நினைத்து
கண்ணை கட்டும் கட்டழகியே
என்னைக் காதலித்துப் பார்
காதலிலே காமத்தைக் கழித்து
காதலியாய் ரசனை சேர்த்து
காதலைத்தான் புரிந்துக் கொள்ள
என்னைக் காதலித்துப் பார்
கவிதையால் என்னை நனைத்தாலும்
கவிதையிலே உண்மைக் கலந்து
கவிதையாய் வாழும் ராதையே
என்னைக் காதலித்துப் பார்
விரதமின்றி என்னை அணுகி
விரசமின்றி என் கைகோர்த்து
விருப்புடன் அன்பை அறிய
என்னைக் காதலித்துப் பார்
உன்னை சிரிக்கவைக்க நானிருக்க
உன்னை கடிந்துகொள்ள நானிருக்க
உன்னை ஏற்றுக்கொள்ள நானிருக்க
என்னை மட்டும் காதலித்துப் பார்
இங்க கொஞ்சம் கேளுங்க – 4
இங்க கொஞ்சம் கேளுடி கண்ணு
என்ராகத்த கொஞ்சம் புரிஞ்சுக்க கண்ணு
என் உசிரவிட்டு பாடுறனே
கேக்குதாடி என் செல்லக் கண்ணு
கரடு மொரடா இருந்த மனச
குளுகுளுன்னு மாத்திபுட்ட
ஏத்தத்தோட அலஞ்ச மனச
சரசரன்னு எறக்கிபுட்ட
கெத்தா திரிஞ்ச என்ன
கனவுலதான கட்டிபுட்ட
காதலுன்னா சிரிச்ச எனக்கு
தவிப்ப தான தந்துபுட்ட
வொன் குரல கேட்கத்தான
நானு இங்க நிக்கேனே மாமா
என் கண்ணீர தொடைக்கத்தான
நீ பாடுறீயோ சொல்லு மாமா
திமிரு புடிச்சு வம்படிச்ச
என் வாயத்தான தச்சுபுட்ட
கடகடன்னு சிரிச்ச என்ன
அடக்கமாத்தான மாத்திபுட்ட
படிப்பு இல்ல பிடிப்புமுல்ல
இருந்தாலும் ஏத்துகிட்ட
மேகத்த பாத்து என்ன பாத்து
கவித எழுதி தள்ளிபுட்ட
கண்ணு ரெண்டும் செவந்து போக
அழுத காலம் உண்டு மாமா
நீ வரப்போற சங்கதிய கேட்டு
வொந்தெசய பாத்தே இருக்கேனே மாமா
ஏனோ எனக்கு தெரியலயே
உன்ன பாக்கத்தான துடிக்குறனே
அழகால மயங்காத என்ன
வொன் மனசால இறுக்கினியே
செவப்புசேல வாங்கி வந்தேன்
சிவத்த பொண்ணு உன்ன பாக்க
உன் அப்பன்கிட்ட கேட்டுவிட
மஞ்ச சரடு கட்டிவிட
சோந்து இருந்த என்ன காண
தல கோத வாரீயா
வொன் மடியிலயே தலசாய்ச்சு
அழுற என்ன சிரிக்கவக்க வாரீயா
புது வருசத்தில சேதியா
வொன் வரவுவந்துது பாத்தியா
என்ன பாக்க வாரீயா
தாலி கட்ட வாரீயா
இங்க கொஞ்சம் கேளுங்க
இதையும் கொஞ்சம் கேளுங்க
நாங்க நல்லா இருக்கவே
நீங்க நேந்துகிட வேணுங்க
இங்க கொஞ்சம் கேளுங்க
இதையும் கொஞ்சம் கேளுங்க
நாங்க சிரிச்சு வாழவே
நீங்க நேந்துகிட வேணுங்க
என்ராகத்த கொஞ்சம் புரிஞ்சுக்க கண்ணு
என் உசிரவிட்டு பாடுறனே
கேக்குதாடி என் செல்லக் கண்ணு
கரடு மொரடா இருந்த மனச
குளுகுளுன்னு மாத்திபுட்ட
ஏத்தத்தோட அலஞ்ச மனச
சரசரன்னு எறக்கிபுட்ட
கெத்தா திரிஞ்ச என்ன
கனவுலதான கட்டிபுட்ட
காதலுன்னா சிரிச்ச எனக்கு
தவிப்ப தான தந்துபுட்ட
வொன் குரல கேட்கத்தான
நானு இங்க நிக்கேனே மாமா
என் கண்ணீர தொடைக்கத்தான
நீ பாடுறீயோ சொல்லு மாமா
திமிரு புடிச்சு வம்படிச்ச
என் வாயத்தான தச்சுபுட்ட
கடகடன்னு சிரிச்ச என்ன
அடக்கமாத்தான மாத்திபுட்ட
படிப்பு இல்ல பிடிப்புமுல்ல
இருந்தாலும் ஏத்துகிட்ட
மேகத்த பாத்து என்ன பாத்து
கவித எழுதி தள்ளிபுட்ட
கண்ணு ரெண்டும் செவந்து போக
அழுத காலம் உண்டு மாமா
நீ வரப்போற சங்கதிய கேட்டு
வொந்தெசய பாத்தே இருக்கேனே மாமா
ஏனோ எனக்கு தெரியலயே
உன்ன பாக்கத்தான துடிக்குறனே
அழகால மயங்காத என்ன
வொன் மனசால இறுக்கினியே
செவப்புசேல வாங்கி வந்தேன்
சிவத்த பொண்ணு உன்ன பாக்க
உன் அப்பன்கிட்ட கேட்டுவிட
மஞ்ச சரடு கட்டிவிட
சோந்து இருந்த என்ன காண
தல கோத வாரீயா
வொன் மடியிலயே தலசாய்ச்சு
அழுற என்ன சிரிக்கவக்க வாரீயா
புது வருசத்தில சேதியா
வொன் வரவுவந்துது பாத்தியா
என்ன பாக்க வாரீயா
தாலி கட்ட வாரீயா
இங்க கொஞ்சம் கேளுங்க
இதையும் கொஞ்சம் கேளுங்க
நாங்க நல்லா இருக்கவே
நீங்க நேந்துகிட வேணுங்க
இங்க கொஞ்சம் கேளுங்க
இதையும் கொஞ்சம் கேளுங்க
நாங்க சிரிச்சு வாழவே
நீங்க நேந்துகிட வேணுங்க
Subscribe to:
Comments (Atom)