Thursday, April 19, 2007

உன்னிடம் என்னக் கண்டேன்?

உன் குரலிலே காந்தம் கண்டேன்
உன் இசையிலே இனிமைக் கண்டேன்
உன் மொழியிலே ரசனைக் கண்டேன்
உன் ராகத்திலே கலையைக் கண்டேன்

உன் பாவத்திலே உருக்கம் கண்டேன்
உன் கானத்திலே விருப்பம் கொண்டேன்
உன் பக்தியிலே இறையைக் கண்டேன்
உன் பாட்டிலே சிரத்தை கண்டேன்

உன் நடையிலே இசையைக் கண்டேன்
உன் அசைவுகளே இசைப்பதைக் கண்டேன்
உன் காதலே இசையாய் கண்டேன்
உன் அதிர்வுகளே இசையென்றுக் கண்டேன்

உன் ஓசையிலும் அழகினைக் கண்டேன்
உன் உருவம் நிலைக்கக் கண்டேன்
உன் புகழை வானளவுக் கண்டேன்
உன் சிறப்பே நீயெனக் கண்டேன்


[This poem was read out in Bahrain FM 104.2 on 17/04/2007]

2 comments:

butterfly Surya said...

Wow.
Very Nice

Surya
Dubai

Dr.V.K.Kanniappan said...

அருமையான கவிதை; ஆனால் தேவையற்ற இடங்களில் ஒற்றெழுத்துகளைத் தவிர்க்க வேண்டும்.
உன்னிடம் என்ன(க்) கண்டேன்?
உன் குரலிலே காந்தம் கண்டேன்
உன் இசையிலே இனிமை(க்) கண்டேன்
உன் மொழியிலே ரசனை(க்) கண்டேன்
உன் ராகத்திலே கலையைக் கண்டேன்

உன் பாவத்திலே உருக்கம் கண்டேன்
உன் கானத்திலே விருப்பம் கொண்டேன்
உன் பக்தியிலே இறையைக் கண்டேன்
உன் பாட்டிலே சிரத்தை(யைக்) கண்டேன்

உன் நடையிலே இசையைக் கண்டேன்
உன் அசைவுகளே இசைப்பதைக் கண்டேன்
உன் காதலே இசையாய்க் கண்டேன்
உன் அதிர்வுகளே இசையென்று(க்) கண்டேன்

உன் ஓசையிலும் அழகினைக் கண்டேன்
உன் உருவம் நிலைக்கக் கண்டேன்
உன் புகழை வானளவு(க்) கண்டேன்
உன் சிறப்பே நீயெனக் கண்டேன்

சிரத்தை கண்டேன் என்பது தலையைக் கண்டேன் என்று பொருளாகும்.சிரத்தையைக் கண்டேன் என்றிருக்க வேண்டும். சிரத்தையைக் கண்டேன் என்பது அக்கறையைக் கண்டேன் என்றாகும்.