இங்க கொஞ்சம் கேளுடி கண்ணு
என்ராகத்த கொஞ்சம் புரிஞ்சுக்க கண்ணு
என் உசிரவிட்டு பாடுறனே
கேக்குதாடி என் செல்லக் கண்ணு
கரடு மொரடா இருந்த மனச
குளுகுளுன்னு மாத்திபுட்ட
ஏத்தத்தோட அலஞ்ச மனச
சரசரன்னு எறக்கிபுட்ட
கெத்தா திரிஞ்ச என்ன
கனவுலதான கட்டிபுட்ட
காதலுன்னா சிரிச்ச எனக்கு
தவிப்ப தான தந்துபுட்ட
வொன் குரல கேட்கத்தான
நானு இங்க நிக்கேனே மாமா
என் கண்ணீர தொடைக்கத்தான
நீ பாடுறீயோ சொல்லு மாமா
திமிரு புடிச்சு வம்படிச்ச
என் வாயத்தான தச்சுபுட்ட
கடகடன்னு சிரிச்ச என்ன
அடக்கமாத்தான மாத்திபுட்ட
படிப்பு இல்ல பிடிப்புமுல்ல
இருந்தாலும் ஏத்துகிட்ட
மேகத்த பாத்து என்ன பாத்து
கவித எழுதி தள்ளிபுட்ட
கண்ணு ரெண்டும் செவந்து போக
அழுத காலம் உண்டு மாமா
நீ வரப்போற சங்கதிய கேட்டு
வொந்தெசய பாத்தே இருக்கேனே மாமா
ஏனோ எனக்கு தெரியலயே
உன்ன பாக்கத்தான துடிக்குறனே
அழகால மயங்காத என்ன
வொன் மனசால இறுக்கினியே
செவப்புசேல வாங்கி வந்தேன்
சிவத்த பொண்ணு உன்ன பாக்க
உன் அப்பன்கிட்ட கேட்டுவிட
மஞ்ச சரடு கட்டிவிட
சோந்து இருந்த என்ன காண
தல கோத வாரீயா
வொன் மடியிலயே தலசாய்ச்சு
அழுற என்ன சிரிக்கவக்க வாரீயா
புது வருசத்தில சேதியா
வொன் வரவுவந்துது பாத்தியா
என்ன பாக்க வாரீயா
தாலி கட்ட வாரீயா
இங்க கொஞ்சம் கேளுங்க
இதையும் கொஞ்சம் கேளுங்க
நாங்க நல்லா இருக்கவே
நீங்க நேந்துகிட வேணுங்க
இங்க கொஞ்சம் கேளுங்க
இதையும் கொஞ்சம் கேளுங்க
நாங்க சிரிச்சு வாழவே
நீங்க நேந்துகிட வேணுங்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment