
பிஞ்சு மலரே
கொஞ்சும் மொழியே
நெஞ்சக் கனியே
கெஞ்சும் கவியே
மழலை சிகரமே
குழந்தை செல்வமே
அழகு மாணிக்கமே
பழுதில்லா திலகமே
காலைப் பொழுதில்
பாலைக் குடித்தாய்
மாலை நேரத்திலோ
சிலையாய் அமர்ந்தாய்
விழுதாய் நீயிருந்தும்
பழுதான அநாதையானேன்
அழுதாலும் கலங்காமல்
எழுதாய் என்றாயே
பஞ்சமது வாட்டியதால்
தஞ்சமது அடைந்தாயோ
கஞ்சமில்லா அன்புடன்
அஞ்சாமல் சென்றாயோ
விண்ணின் ஆதவனே
மண்ணின் மைந்தனே
எண்ணம் சிறக்கவே
(இவ்)வண்ணம் ஏற்றாயோ
கண்களின் தீட்சண்யத்துடன்
கண்ணீரை துடைத்தாயே
கண்ணார செல்வத்தின்
கண்டேனே உயர்வதனை
புகைப்படத்தில் நிற்கும்
நகையோன் மகனே
சிகையில்லா துறவியான
என்னையும் பார் மகனே
1 comment:
You have poured out your feelings in a poetic form. Good one! Your son should read this after some years. The effect will then be seen.
Post a Comment