Wednesday, August 29, 2007

என்னைக் காதலித்து பார் – பார்வை ஐந்து

கடலலையின் தாலாட்டில் புரள்வோமா
செம்பருத்தி சிவப்பினுள் மறைவோமா
வைரத்தினை உறைவிடமாய் கொள்வோமா
என்னைக் காதலித்துதான் பாரம்மா


தாலாட்டில் புரண்டிடு அவளுடன்
சிவப்பினுள் மறைந்திடு இவளுடன்
உறைந்து மகிழ்ந்திடு இருவருடன்
என்னை விட்டுவிடு மகிழ்வுடன்

இசைகேட்டும் ஒதுங்குவது ஏனம்மா
வார்த்தையால் சாடுவது ஏனம்மா
கோபத்தின் காரணம்தான் யாதம்மா
என்னை காதலித்துதான் பாரம்மா


ஒதுங்க முடியாமல் தவிப்பது நானல்லவோ
உன்னை சாடாமலே துடிப்பது நானல்லவோ
காரணமும் காரியமும் என்வாழ்வில் நீயல்லவோ
என்னைக் காதலிக்கத் தூண்டியதும் நீயல்லவோ

கண்ணனின் ராதையே நீதானம்மா
காதலர்கள் சின்னமே நாம்தானம்மா
கவிதைகள் பொழிந்திடும் கண்ணம்மா
என்னுடன் சேர்ந்திடுவாய் செல்லம்மா


பிரிந்தே வாழ்ந்திடுவோம் உலகிற்காக
சிரித்தே அழுதிடுவோம் உலகிற்காக
பாராமலே இருந்திடுவோம் உலகிற்காக
மறவாமல் இறந்திடுவோம் உலகிற்காக

பிரிவு நீயெனில் பிறப்பிலும் நீயே
இருப்பு நீயெனில் இறப்பிலும் நீயே
சிரிப்பு நீயெனில் சிறப்பிலும் நீயே
பிரபஞ்சம் நானெனில் நானே நீயே


இசையின் நாயகனே செல்கிறேன் நான்
இல்லத்தின் கூவலில் கரைகிறேன் நான்
காதலை மறைத்திட்டு வாழ்கிறேன் நான்
காத்திருப்பேன் உனக்காக என்னென்றும் நான்

3 comments:

butterfly Surya said...

xlent..

Surya

dsampath said...

ENNANGAL PINNIA PIRAGU
ULLANGAL KALANDA POZHUDU
NEEYENDRU ONRUM ILLAI
NAAN ENRU VERUPADILLAI
unnidam nan kalaven
Thaniye anandam peruven
Thunbathil nan thilaippen
Nee veru naan veru enben

i am having a ball in your blog space. i hope you dont mind..
if i keep reading your poems. sahll start writing also.

"பிரிந்தே வாழ்ந்திடுவோம் உலகிற்காக
சிரித்தே அழுதிடுவோம் உலகிற்காக
பாராமலே இருந்திடுவோம்உலகிற்காக
மறவாமல் இறந்திடுவோம்உலகிற்காக"

wht a beautiful sentiment expressed...
great....

Padmaja said...

Haha! Your Tamil is so good, Sampath. You must start venturing in Tamil as well.