
கணக்கில் விட்டேன் நூறை அன்று
வாழ்வில் பிடித்தேன் நூறை இன்று
கண்களால் கண்டது நூறு அன்று
அனுபவத்தால் கடந்தது நூறு இன்று
சுகந்தமென நினைத்தது நூறு அன்று
விஷமாய் மாறியது நூறும் இன்று
கோடிட்டு கோலமிட்டது நூறு அன்று
முகமே கோடானது நூறால் இன்று
என்னழகால் கவரப்பட்டோர் நூறு அன்று
என்னை ஒதுக்குவோர் நூறு இன்று
வேண்டினேன் இறைவனிடம் நூறை அன்று
என்மரணம் வேண்டுவோர் நூறு இன்று
பொருளும் அறிவும் நூறானது அன்று
என்னிடம் இல்லையே நூறு இன்று
கிழவியென அழைத்தேன் பாதிநூறை அன்று
கிழவியெனில் கலங்குகிறேன் நூறில் இன்று
உணர்வுகளால் இறந்தேன் நூறுமுறை அன்று
உணர்வற்று வாழ்கிறேன் நூறைக்கடந்து இன்று
4 comments:
Touching poem Padmaja! Tears really got accumulated in my eyes as I saw the photo and read your verses written for the picture. Very touching. I always feel so sad for old people who are ignored by their own relatives.
I also get reminded of my own Grand Mother when I see an old lady. I loved her so much. A truly touching poel Padmaja! You have stirred my heart.
அழகான வரிகள். கருத்தாழம் பாராட்டுக்குரியது. உங்களின் பிறபக்கங்களும் சுவையாக உள்ளன. தொடரட்டும் உங்கள் உற்சாகம்.:)
sad, poignant and the lines flow so smoothly and the contrasts in the lines are just aesthetically marvelous...
I'd personally prefer a more optimistic ending - but I suppose the reality of this persona you create is different.
The sad look on the face made me write so. Thank you for your comments, Raj.
தங்கள் பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சியளித்தது. மிக்க நன்றி, கபீரன்பன்.
Post a Comment