
காய்ச்சலை எதிர்ப்பார்க்கும் மனம் வேண்டும்
சளியை மறக்கும் உறுதி வேண்டும்
மாற்றுடை வைத்திருக்க அன்னை வேண்டும்
கால்களில் தாளமிடும் சுகம் வேண்டும்
கோவிலெனும் உள்ளத்தில் பக்தி வேண்டும்
பஞ்சபூதங்களை மதிக்கும் புத்தி வேண்டும்
குழந்தையாய் துள்ளும் இதயம் வேண்டும்
சிறகடித்து ரசிக்க மென்மை வேண்டும்
தலையில் மத்தளவாசிப்பை உணர வேண்டும்
தலைகனமில்லா மாணவனாய் நிற்க வேண்டும்
எதற்கும் அசராத நெஞ்சுறுதி வேண்டும்
சிறுவனாய் இருப்பதில் பெருமை வேண்டும்
பெரியவனாய் வளர்ந்தாலும் மறவாமை வேண்டும்
மறந்தும் பெரியோரை இகழாதிருக்க வேண்டும்
கொட்டும் நீரில் நிற்கவும் தைரியம் வேண்டும்
கொட்டாமல் நீரையும் சேமிக்க வேண்டும்
1 comment:
Wonderful Padmaja! It is indeed a nice picture and well written too. You have stepped into the shoes of a young boy and written. Very well done!
Post a Comment