
தேசியக் கொடியிலே கண்ட வண்ணங்கள்
பாதைக் கம்பியிலும் காண நேர்கிறதே
காற்றில் பறக்கும் கட்சி சின்னங்கள்
மக்கள் மத்தியில் துவள நேர்கிறதே
மொழிகள் பல உண்டிங்கு நாட்டிலே
பேசியே காலம் உருள நேர்கிறதே
வசதியும் பதவியும் உண்டிங்கு நாட்டிலே
மக்கள் மோகத்தில் அழியவும் நேர்கிறதே
அன்னையிடம் சிறையிருந்த காலத்திலே
சுவாசிக்க இவ்வுலகை காண நேர்ந்ததே
மண்ணைவிட்டு பறந்துவிட்ட நேரத்திலும்
சிறையாய் இவ்வுலகில் இருக்க நேர்கிறதே
கையில்லா சிலையாய் அரணுள் நின்றே
பூசையும் மணியாரங்களும் ஏற்க நேர்கிறதே
சிகரமாய் உயிருடன் இருந்த காரணத்தாலோ
பட்டாசாய் என்னுடல் பொசுங்கவும் நேர்ந்ததே
1 comment:
Very meaningful verses Padmaja! Let me tell you - you are an all rounder! You lay hands on all kinds of subjects. Great stuff Padmaja! Keep it up!
Post a Comment