
மந்தியாய் நானெனில்
மாந்தராய் நீ
சொந்தமறியா நானெனில்
சந்தமறியா நீ
காந்தியிடம் நானெனில்
சாந்தியில்லா நீ
நீயாய் மாற நான் விரும்பினால்
நானாய் மாற நீ விரும்புகிறாய்
நீயென நினைத்து அன்பு செய்தால்
நானென நினைத்து கலகம் செய்கிறாய்
நான் நானாக கூட இருக்க முடியாமல்
நீயேன் என்னைப் போல் இருக்கிறாய்
2 comments:
Wow Paddu! Kalakitteenga! Probably such thoughts are only existing in the minds of monkeys. Who knows!!
Impressive, Padmaja. I like the rhythm and the presentation - and the
thought behind it all. Marvelous.
Post a Comment