Saturday, November 25, 2006

அன்பு

அன்பு தன்னலமின்றி தருவதற்கே
அன்பு உணர்ந்து குதிப்பதற்கே
அன்பு அனைவருடன் பகிர்வதற்கே
அன்பு என்றும் தூய்மையானதே

அன்பு மகிழ்ச்சியில் துள்ளும்
அன்பு வெட்கத்தில் மலரும்
அன்பு அனுபவிக்க துடிக்கும்
அன்பு அழிவல்ல நினைக்கும்

அன்பு தருவது வலியை
அன்பு திணிப்பது களிப்பை
அன்பு வெல்வது நெஞ்சை
அன்புக்கு தேவையில்லை மூளை

அன்பு அழகில் முதலில் மயங்கும்
அன்பு செய்த மனம் தவிக்கும்
அன்பு இல்லை என்றும் பாவம்
அன்பு வெல்வது அல்ல விரும்பும்

அன்பு உண்மையை கணிக்க தவறும்
அன்பு கோபத்தையும் தூண்டும்
அன்பு வயதை அல்ல காணும்
அன்பே ஞானியை உருவாக்கும்

அன்பு விலைக்கும் வாங்கும் பொருள் இல்லை
அன்பு பொய் பேசும் கயவனுக்கு இல்லை
அன்பை வைத்து உயர்த்து உன் வாழ்வை
அன்பு இனி செல்வது சரியான பாதை

அன்பு உயர பறக்க நினைக்கும்
அன்பு அனைத்து எல்லையையும் கடக்கும்
அன்பு நெஞ்சின் ஆழத்தை தொடும்
அன்பே முன்னோர்கள் சொன்ன வாக்கும்

அன்பு என்னை அடிபணிய வைப்பது உண்மை
அன்பு என்னைத் தொடர்ந்து கவர்வது உண்மை
அன்பு உறுதியை பலப்படுத்துவதும் உண்மை
அன்பிற்கு ஈடு அன்பே என்பது நானறிந்த உண்மை

3 comments:

பெண் said...

அன்பு பற்றீய கவிதை கவர்ண்ட்தது. அதுவும் கடைசி னாலு வரிகள் ..........அன்பை பயிர் என உளாவியளாள்ர் ருத்ரன் கூறூகிறார்.

Padmaja said...

நன்றி, அம்பை.

butterfly Surya said...

அனைத்து கவிதைகளும் மிக மிக

அருமை..

வாழ்த்துக்கள்..

சூர்யா
துபாய்.

butterflysurya@gmail.com