Wednesday, December 06, 2006

நட்பு

அம்மையாய் வலியைத் தாங்கி
ஆதரவு தந்து ஊக்குவித்து
இன்பம்தனை பகிர்ந்து கொண்டு
ஈவிரக்கத்துடன் துக்கத்தில் பங்கெடுத்து
உரிமையுடன் கை கோர்த்து
ஊமையாகவே கதைகள் பலபேசி
எதிர்ப்பார்ப்பின்றி அன்பு சொரிந்து
ஏமாற்றங்களை தடவிக் கொடுத்து
ஐயமின்றி எண்ணங்களை சீர்திருத்தி
ஒற்றுமையாய் வாழ்நாளை கழித்து
ஓசையின்றி இயற்கையை ரசித்து
ஔவையைப் போல் வழிகாட்டி
அஃதே சேர்ந்திருப்பதாம் நட்பு

5 comments:

butterfly Surya said...

அ முதல் ஃ வரை...

நட்பிற்கு புதிய இலக்கணம் சொன்ன

பகரின் மாடர்ன் ஓவை நீர் .....

வாழ்த்துக்கள்..

சூர்யா
துபாய்.

butterflysurya@gmail.com

maddhu said...

sagodaryin marumagale
natpu patri unnudia varthaigal athanaiyum sathiam
aanal avai saathiama?

Padmaja said...

ஆஹா.. மாமாவா இது. நம்ப முடியலையே.

நீங்க படிச்சு பதில வேற எழுதி கலக்குறீங்களே. உங்களை இங்கு கண்டதில் எனக்கு எத்தனை மகிழ்ச்சி என்று விவரிக்க முடியாது.

நட்பின் இலக்கணம் – நீங்கள் சொல்வது சரியே. ஆனால் நாம் அப்படி இருக்க முயலாமே?

நேரம் கிடைக்கும் போது இதையும் பார்த்து கருத்திடுங்கள்.

http://padmaja-whispers.blogspot.com

maddhu said...

Dear Padmaja,
Unnudaiya latest kavithaigalaiyum padithu rasithen. Adeyappa! Nadodik kavithaigal kooda ezhuthi thalluraiye? "kakaikku than kunju pon kunju" enbadhu nijam. Enathu marumagalin aangilam matrum Tamil kavithaigal anaithum jore! Engal veettilum oru kavithayini erukkiral enru perumaipattukkollalam. Adhu sari, Eppadi edhil Thamilil type seivathu?

dsampath said...

Your grammer on friendship is amazing.
I think I am your true friend as i think I try to follw all these except these two
ஊமையாகவே கதைகள் பலபேசி
ஓசையின்றி இயற்கையை ரசித்து
My ego rests on expression . Some times I say things which need not be said.I am likely to make errors on this score.
I share the other sentiments with my friends......(like you)