Tuesday, October 02, 2007

தந்தை காந்தியிடம் நான் கேட்கும் கேள்விகள்

வெள்ளையுடை தரித்து
முட்டைக் கண்ணாடியணிந்து
ஆட்டுப்பால் குடித்து
கட்டாந்தரையில் படுத்து
சொந்தபந்தம் பாகுபாடின்றி
அஹிம்சையெனும் ஆயுதமேந்தி
மத ஒற்றுமையை போதித்து
உண்ணாவிரதம் இருந்து
நாட்டின் சுதந்திரமே
கர்மமென வாழ்ந்தீரே

கலர்கலராய் துண்டு போர்த்தி
சுகத்திலே உருண்டு புரண்டு
சொந்தங்களை கவனித்து
உண்டுவிட்டு உண்ணாவிரதமிருந்து
பிறரின் சதையை வதைத்து
நிதி சேர்த்து நீதியை மிதித்து
நீதிபதியை கண்டித்து
சுதந்திரத்தை நிலைநாட்டும்
நல்லோர் வாக்கினுள்
அரசியல் சிரஞ்சீவியானதை
கலங்காமல் உணர்ந்தீரோ

சபர்மதி ஆசிரமத்தில்
குல்லாய் அணிந்து
சாதி மத பேதமின்றி
அனைவரையும் அணைத்து
அன்பாய் அரவணைத்து
புல்லட் புரூப் வண்டியின்றி
கால்நடையாக நடந்து
அரசியல் புரியாமல்
திறந்த நெஞ்சுடன் வாழ்ந்தீரே

பதவி மோகத்தில்
நாட்டையும் தன்னையும்
விற்கும் அரசியல்வாதிகள்
உம்மை இன்று மட்டும்
மாலையால் தழுவும் போது
உந்தன் நெஞ்சிலிருக்கும் ராமர்
வலி தாளாமல் துடித்துக்
கதறுவதை உணர்கிறீரோ

மதங்கடந்து மனமொன்றவே
சரிசமமாய் அனைவருக்கும்
நான்கு புருஷார்த்தங்களென
தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்
கற்றுத் தந்த வெகுளித் தந்தையே

வன்மம், சூழ்ச்சி, சுயநலம், பேராசை
இவை மட்டுமே உயிர் வாழத் தேவை
என்ற துண்டாடும் கொள்கைகளை
தற்போதைய அரசியல் தலைவர்களிடம்
கற்றுக் கொள்ளாமல் பிறந்து இறந்தது
பரிதாபமே என்பதை உணர்வீரோ

2 comments:

Latha said...

Wow Padmaja! Your poem reflects the contemporary political attrocities. If Gandhiji was alive today,he would have regretted having struggled a lot for India's independence from the hands of the British.
Good stuff!

butterfly Surya said...

Xlent..

Great tribute to Mahatma Ji

Chak De India

Surya
Chennai
butterflysurya@gmail.com