சந்தங்கள் போட்டியிட்டன அவள் விழியைக் கண்டு
சங்கதிகள் களைகட்டின அவன் உவகை கண்டு
சங்தேகங்கள் முளைத்தன அவள் அழகைக் கண்டு
சங்கேதங்கள் கலகலத்தன அவன் சிமிட்டல் கண்டு
சலசலத்தன இலைகளும் அவள் நாதம் கண்டு
சலாமிட்டன உலகம் அவன் சாதனை கண்டு
சலங்கைகளோ அணைத்தன அவள் பாதம் கண்டு
சலிப்புகளே ஓடினவே அவன் உற்சாகம் கண்டு
காலோசையும் மருண்டன அவள் மென்மை கண்டு
காலணிகள் நடுங்கின அவன் மேன்மை கண்டு
காலங்கள் தடுமாறின அவள் வெண்மை கண்டு
காலவனும் ரசித்தானே அவன் மதியைக் கண்டு
மாதுளை வெட்கின அவள் வண்ணம் கண்டு
மாதுக்கள் வியந்தனர் அவன் எண்ணம் கண்டு
மாதாவாய் போற்றினர் அவள் அன்பைக் கண்டு
மாதிரியாய் கொண்டனர் அவன் பண்பைக் கண்டு
சித்திரங்களே சிலிர்த்தன அவள் ரசனை கண்டு
சித்தங்களோ குளிர்ந்தன அவன் சிரிப்பைக் கண்டு
சித்திகள் குவிந்தன அவள் அடக்கம் கண்டு
சித்பவமாய் ஒளிர்ந்தானே அவன் கடமை கொண்டு
அவனியது போற்றியது அவளை நிலவாய் கண்டு
அவனியது காட்டியது அவனை ஆதவன் என்று
அவனியது விரும்பியது அதன் விளையாட்டில் ஒன்று
அவனும் அவளும் பார்த்தனரே விதியைக் கொண்டு
மோதலுக்கு அழைத்தானே அவளைக் கண்டு
மோதலிலும் கலங்கினாளே அவனைக் கண்டு
மோதுவதிலும் ஆனந்தம் இருவருமே கண்டு
மோதிரம் மாற்றினரே காதல் கொண்டு
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
hi pls add my googlepages in your blog frends list or favorites
its a page for tamil ebooks , free downloads.
thanks for addding
url - http://gkpstar.googlepages.com/
Post a Comment