Friday, September 14, 2007

விநாயகர் ஸ்துதி

உன் முகம் கண்டேனே
ஊழ்வினை களைந்தேனே
உன்னிடம் கற்றேனே
ஊக்கமது பெற்றேனே

நான்காம் நாள் பிறந்தோனே
நான்மறையில் சிறந்தோனே
அஷ்டதிக்கின் அதிபதியே
அண்டத்தின் முதல்பதியே

பூதகணங்கள் பூஜிக்கவே
பூவுலகம் செழித்திடவே
சித்திபுத்தி இருப்பிடமாய்
சிந்தனையின் பிறப்பிடமாய்

கர்மத்தில் ஒருகால் ஊன்றி
கடவுளாய் மறுகால் உணர்ந்து
வேதாந்தம் நினைவில் கொள்ள
செவியதனை காட்டினாயோ

வாய்பேச்சை வெட்டிவிட்டு
வாய்மைதனை பற்றியபடி
சிறுமை காணா கண்களாலே
தியானம் பயில சொன்னாயோ

நச்சுப் பல்லை பிடுங்கிவிட்டு
நல்ல எண்ணம் கொள்ள சொன்னாய்
குண்டலினி சக்தியைத்தான்
இடுப்பு பாம்பாய் காட்டினாயோ

செல்வச் செழிப்பு வயிறுடனே
என் நன்மை தீமை ஏற்றாயே
கட்டுக்கடங்கா மனதினையே
மூஞ்சூராய் அடக்குவாயோ

கோடாரியால் மாயை அழித்திட்டு
கயிறினாலே உன்வசம் இழுத்திட்டாய்
ருத்திராட்சம் கொண்டு ஜெபிப்போனை
உன்னருளால் நனைத்திட்டாயோ

நாதியற்றோரும் நாடிதனில்
இதபிங்கலம் உயிர்பித்து
சூட்சுமம்தனை அறிந்திடவே
தும்பிக்கை உயர்த்தினாயோ

ஓம்காரத்தின் நாயகனே
சிவசக்தி செல்வமகனே
எதுவுமே அல்பமில்லையென
அருகம்புல்லை ஏற்றாயோ

சித்திபுத்தி நாதனாய்
தெற்கில் நீ பிரம்மச்சாரியானாய்
க்ஷேமம் லாபம் தந்தையாய்
வடக்கிலோ நீ சம்சாரியானாயே

வேதவியாசரின் பாடல்களை
தந்தமுடைத்து எழுதினாயே
வேதமறியா இச்சிறுமியைதான்
உண்மையில் நிறுத்துவாயோ

கொழுக்கட்டை பிரீதியிலே
கோவிலென என்னில்லம் வந்தாய்
கொழுந்து விட்டெறியும் அறியாமையை
பொசுக்கிவிட்டு ரட்சிப்பாயோ

அகஅழுக்கை அழித்திட்டு
கம்பீர யானையாய் நிற்பேனா
தீயவைதனை மூழ்கிவிட்டு
தீபமாய் ஒளிவீசி திகழ்வேனா

தள்ளாமை வந்த போதிலும்
தவறாமல் உன் புகழ்பாடி
தவமிருந்து காத்திடவே
தவபுதல்வன் அருள்வாயோ

விக்னமுள்ள நாளெதுவும்
உன் பார்வையில் சிறந்திடுமே
கட்டியணைக்கும் இறப்பிலுமே
உன் நாமம் ஜெபிப்பேனா

பெற்றோரை வணங்கிடவே
உன்னிடமிருந்து கற்றேனே
பொறுமைதனை தந்திட்டே
உன்னகம் ஆட்கொள்வாயோ

4 comments:

Unknown said...

விநாயகரின் அருள்
வேண்டி நிற்கும்
தோழியை ஆட்கொள்ள
வேண்டுகின்றேன்..
உள்ளமுருகியே..
(அப்படியே என்னையும்)

Latha said...

Lovely one! May the deity bless you with all that you aspire for. Lord Ganapathy is the favourite God of nearly 80% of the Hindus but I haven't seen anybody writing about Him. People write mostly about Krishna, Brahma, Devis and the others but poor sweet Lord Vinayaka was not that much cared for mainly because He is taken for granted by many!
Good attempt!

Unknown said...

அகஅழுக்கை அழித்திட்டு
கம்பீர யானையாய் நிற்பேனா
தீயவைதனை மூழ்கிவிட்டு
தீபமாய் ஒளிவீசி திகழ்வேனா

தள்ளாமை வந்த போதிலும்
தவறாமல் உன் புகழ்பாடி
தவமிருந்து காத்திடவே
தவபுதல்வன் அருள்வாயோ

These lines impressed me a lot..... So nice of you write on Lord Ganapathy who is so dear to many..

Mohan Madwachar said...

Wonderful. Well written!