Saturday, August 04, 2007

விண்ணப்பித்தேன்

சளைக்காமல் காடுகளில் திரிந்தேன்
இலவசமாய் பூக்களை முகர்ந்தேன்
இனிப்பான இல்லமதில் வசித்தேன்
உல்லாசத் தேனீயாய் வாழ்ந்தேன்

புரியாமல் பறந்து உழைத்தேன்
சுறுசுறுப்பாய் என்னை வளைத்தேன்
மாளிகையை நிரப்பி ரசித்தேன்
தேனடையில் உயிரை வைத்தேன்

மனிதனின் சுயநலம் உணர்ந்தேன்
என்னுழைப்பை காத்திட விழைந்தேன்
அழிக்கும் கோபத்தில் விழுந்தேன்
உணர்வினை அறவே துறந்தேன்

இழப்பின் வருத்தத்தில் கொதித்தேன்
கடித்திட்டு வென்றிட நினைத்தேன்
புயலென எண்ணமதை முடித்தேன்
வெற்றிக் களிப்பில் திளைத்தேன்

ஆ! மூச்சின் தடுமாற்றத்தில் அழுதேன்
உணர்வுகளின் ஒடுக்கத்தில் ஒளிந்தேன்
அன்பின் மகத்துவம் அறிந்தேன்
புரிந்தும் வாழ்வினை தொலைத்தேன்

தத்துவம் கேளாமல் வளர்ந்தேன் (எனினும்)
மன்னிப்பே வெற்றியென உணர்ந்தேன்
இறப்பினில் ஒளியினை அறிந்தேன்
சுருண்ட உடலாய் உறைந்தேன்

சினத்தின் வேகமது வேண்டேன்
மன்னிக்கா குணமது வேண்டேன்
தேனீயாய் மறுபிறவி வேண்டேன்
என்றே இறைவனிடம் விண்ணப்பித்தேன்

நிறைவாய் மனதினுள் சிரித்தேன்
தேனீயாய் வாழ்வினை முடித்தேன்
காற்றினில் உயிரைக் கலந்தேன்
இனிமையின் சாரத்தில் மறைந்தேன்

3 comments:

butterfly Surya said...

நீண்ட நாட்களுக்கு பிறகு
நல்ல கவிதை வாசித்தேன்..

சூர்யா
துபாய்..
butterflysurya@gmail.com

dsampath said...

I am not seeing your poetry alone but I am also experiencing you through your words.I love this poem as you have written about your experience and the ethos you have brought into play in your life.

Padmaja said...

Surya - Thanks

Sampath - You are partly right. But here, I have assumed myself as a honeybee. The original is English and this is a translation.