Monday, January 07, 2008

என்னை காதலித்துப் பார் – பார்வை ஆறு

விழிகளில் நீரிறைத்து நின்றேன்
பழிகளில் பெரும்பகுதி ஏற்றேன்
வழிகளில் உன்னினைவில் தோற்றேன்
ராதையே, இக்காதலை நானென்ன செய்வேன்

விதிகளில் வினையதை நுழைத்தேன்
சதிகளில் அழிவையே அழைத்தேன்
மதிகளில் அகந்தையை வெறுத்தேன்
ராதையே, இக்காதலை நானென்ன செய்வேன்

வேதனையுடன் உலகிற்காக பிரிந்தேன்
சோதனையாய் உலகையும் அளந்தேன்
சாதனையில் உலகெங்கும் விரிந்தேன்
ராதையே, இக்காதலை நானென்ன செய்வேன்

பந்தங்களில் மாயையைத் திணித்தேன்
சந்தங்களில் மாயாவியாய் மகிழ்ந்தேன்
அந்தமதில் ஆதியென எழுந்தேன்
ராதையே, இக்காதலை நானென்ன செய்வேன்

சேவையதை வரையறுக்க வகுத்தேன்
தேவையதன் நோக்கமதை பிரித்தேன்
பாவையுனை பிரிந்துமே சிரித்தேன்
ராதையே, இக்காதலை நானென்ன செய்வேன்

மறைத்திருக்கும் காதலைக் காட்டுவாயோ
மறைந்திருக்கும் உன்னையும் காட்டுவாயோ
சிறையெடுத்த என்னிதயம் காட்டுவாயோ
ராதையென அகிலமும் முனகுவதை கேட்பாயோ

4 comments:

Latha said...

Nice poem Padmaja. For a change the poem involves Radha. Usually people concentrate on Krishna. So this way, it is unique and good too!

dsampath said...

vayadukku porundada asaikal konden
vazakkathil illada pathai sendren
Vilai madipptra kavidai ketten
Radhaye nan idai ennavenru solven

how do you like that?
this is motivated first tamil kavidai...inspired by you...

i am not able to ocate 5,4,3,2,1

Padmaja said...

Latha - Thanks a lot. This series involves only Radha and Krishna alternately.

Sampath - Great attempt. You have got the flow. Thanks for gracing my blog. :)

சிவக்குமார் said...

இந்த விதி-சதி-ரதி-பதி, விழி-வழி-பழி-மொழி, இதையெல்லாம் விட்டுட்டு புதுசா வேறு வார்த்தைகள் உபயோகப்படுத்துனீங்கன்னா, உங்களாலயும் நல்ல கவிதை எழுத முடியும்னு நினைக்கிறேன்.