இலைகளின் சலசலப்பில் கேட்டது உன்னிசை
இமைகளின் படபடப்பில் கேட்டது உன்னிசை
இதழ்களின் குவிதலில் கேட்டது உன்னிசை
இனியவள் இதயத்திலும் கேட்டது உன்னிசை
காகிதக் கப்பல் பாடியது உன்னிசை
கானகத்து பயங்கரம் பாடியது உன்னிசை
காதோரக் காற்று பாடியது உன்னிசை
காதலியின் இதயத்திலும் பாடியது உன்னிசை
நிழல்களின் மௌனத்தில் உறைந்தது உன்னிசை
நிஜங்களின் அசைவுகளில் உறைந்தது உன்னிசை
நியதிகளின் கடுமையில் உறைந்தது உன்னிசை
நிர்மல இதயத்திலும் உறைந்தது உன்னிசை
மோனைகளின் வரிசையில் சிலிர்த்தது உன்னிசை
மோகனப் புன்னகையில் சிலிர்த்தது உன்னிசை
மோகினி அழகாய் சிலிர்த்தது உன்னிசை
மோன இதயத்திலும் சிலிர்த்தது உன்னிசை
வெள்ளை நிறமாய் நிறைந்தது உன்னிசை
வெயில் கடுமையிலும் நிறைந்தது உன்னிசை
வெற்றிட சாரமாய் நிறைந்தது உன்னிசை
வெகுளி மனதில் நிறைந்தது உன்னிசை
மரண ஓலத்தில் ஒலித்தது உன்னிசை
மகரந்த சேர்க்கையில் ஒலித்தது உன்னிசை
மதுவின் சிதறல்களில் ஒலித்தது உன்னிசை
மதியழகி இதயத்திலும் ஒலித்தது உன்னிசை
உன் மொழியாய் வருடியது உன்னிசை
உன் காதலாய் வருடியது உன்னிசை
உன் அழைப்பாய் வருடியது உன்னிசை
உன்னவள் இதயத்திலும் வருடியது உன்னிசை
காதலன் வரவை உரைக்கிறதோ உன்னிசை
காதல் தேவையென சொல்கிறதோ உன்னிசை
காதலிக்க கற்றுத் தருகிறதோ உன்னிசை
காதலியாய் புதியவளை நாடுகிறதோ உன்னிசை
என்னை பைத்தியம் என்கிறதோ உன்னிசை
என்னை வைத்தியம் செய்கிறதோ உன்னிசை
என் மதியை மயக்குமா உன்னிசை
என் விதியை வெல்லுமா உன்னிசை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
manadai thottadu un kavidai
marabai thandiyadu un kavidai
marayai thazhuviyadu un kavidai
malaippai koduththathu un kavidai
The multiple rhyme that you bring in here is impossible in the english language...
this is really fantastic. compile and publish as a book...
Wow wow........
Glad that you enjoyed the poem.
Post a Comment